32 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வாங்க பிளானா; 15000க்குள் வாங்கலாம்
Acer 4K Smart TV: ஏசர் நிறுவனம் இந்தியாவில் நான்கு அற்புதமான 4K ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏசர் நிறுவனம் இந்தியாவில் நான்கு அற்புதமான 4கே ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏசர் ஐ-சீரிஸ் டிவிகள் நான்கு இன்ச் அளவுகளில் வருகின்றன. அதாவது 32, 43, 50 மற்றும் 55 அங்குலங்கள் இதில் அடங்கும். இவை அனைத்தும் ஆண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. புதிய ஏசர் ஐ-சீரிஸ் வரிசையில் வரும் ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ.14,999 ஆகும். அதேபோல் புதிய ஏசர் 4கே ஆண்ட்ராய்டு டிவிகள் ஃப்ரேம் இல்லாத வடிவமைப்பு மற்றும் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளேவை ஆதரிக்கின்றன. எனவே ஏசர் 4கே ஆண்ட்ராய்டு டிவியின் விலை மற்றும் அம்சங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஏசர் 4கே ஸ்மார்ட் டிவியின் விவரக்குறிப்புகள்
எச்டிஆர் 10+, சூப்பர் ப்ரைட்னஸ், 4கே அப்காலிங்க மற்றும் பிற உள்ளமைக்கப்பட்ட அம்சங்களுடன் சிறந்த பார்வை அனுபவத்திற்காக டிவியின் படத் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏசர் ஸ்மார்ட் டிவியானது 1 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களைக் காட்டக்கூடியது மற்றும் மேம்படுத்தப்பட்ட கண் பராமரிப்புக்காக நீல ஒளிக் குறைப்பையும் வழங்குகிறது. 32-இன்ச் மாடலில் உயர் வரையறை காட்சி தெளிவுத்திறன் உள்ளது, மற்ற மூன்றில் அல்ட்ரா ஹை-டெபினிஷன் டிஸ்ப்ளே ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாடலும் 30வாட் ஆடியோ சிஸ்டம் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவுடன் இரட்டை வைஃபை மற்றும் புளூடூத் இணைப்பை ஆதரிக்கிறது.
மேலும் படிக்க | Infinix Note 12 5G: பிளிப்கார்ட்டில் ரூ.499-க்கு விற்பனை
ஏசர் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள்
ஆண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, கூகுள் ப்ளே, ஃபாஸ்ட்காஸ்ட், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்மார்ட் பிளேயர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் இந்த டிவியில் உள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் செயல்பாட்டிற்கான வாய்ஸ் இயக்கப்பட்ட ரிமோட் தொகுப்பில் உள்ளது. 32-இன்ச் மாடலில் 1.5ஜிபி/8ஜிபி ரேம்/ இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, மற்றவையில் 2ஜிபி/16ஜிபி ரேம்/ இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
இந்தியாவில் ஏசர் 4கே ஸ்மார்ட் டிவி விலை என்ன?
ஏசர் 4கே ஸ்மார்ட் டிவியின் விலையைப் பொறுத்தவரை, 32 இன்ச் ஏசர் ஆண்ட்ராய்டு டிவியின் விலை ரூ.14,999 ஆகும். அதேபோல் 43 இன்ச் மாடலின் விலை ரூ.27,999 ஆகும், மறுபுறம் 50 இன்ச் மாடலின் விலை ரூ.32,999 ஆகும், 55 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.37,999 ஆகும். புதிய ஏசர் டிவிகள் இந்தியா முழுவதும் உள்ள பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | iPhone 12-ல் சலுகை மழை: பிளிப்கார்ட் சேலில் நம்ப முடியாத தள்ளுபடிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ