ஆன்லைனில் டிவி வாங்கலாமா? இந்தியர்களுக்கான ரிப்போர்ட்

ஸ்மார்ட் டிவியை ஆன்லைனில் வாங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக லேட்டஸ்ட் ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2022, 06:22 PM IST
  • ஆன்லைனில் ஸ்மார்ட் டிவியை வாங்காலமா?
  • அமேசான் நிறுவனத்தை நம்பும் வாடிக்கையாளர்கள்
  • ஆன்லைனில் டிவி வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆன்லைனில் டிவி வாங்கலாமா? இந்தியர்களுக்கான ரிப்போர்ட் title=

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆன்லைன் விற்பனை தளங்களில்  பட்ஸ் முதல் பிரிட்ஜ் வரை, ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் டிவி வரை அனைத்தும் அதிரடி ஆஃபர்களுடன் கிடைக்கின்றன. பெரிய பெரிய கடைக்களுக்கு சென்று இந்த பொருட்களை வாங்கி வந்த மக்கள், இப்போது ஆன்லைனிலேயே தங்களுக்கு வசதியான பிராண்டு தொலைக்காட்சிகளை தேர்வு செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர். ஏதேனும் குறைபாடு என்றால் திருப்பிக் கொடுத்துவிடலாம், குறைந்த விலை, பியூச்சர்ஸ் என்னென்ன இருக்கிறது என்பதை சுண்டுவிரலில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஆகிய வசதிகள் காரணமாக ஆன்லைன் ஆர்டரை மக்கள் விரும்புகின்றனர்.

மேலும் படிக்க | வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கு நோக்கியாவின் ஃபிளிப் போன் விற்பனை

எனினும் இது சிறந்த முடிவா என்பதை அறிய சைபர் மீடியா ரிசேர்ச் நிறுவனம் ஆய்வு நடத்த களத்தில் இறங்கியது. அந்த நிறுவனத்தின் ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்துள்ளன. அந்த ஆய்வில் ஆப்லைனில் தொலைக்காட்சியை வாங்கியவர்களில் ஐந்தில் மூன்று பேர் தங்களின் அடுத்த புதிய தொலைக்காட்சியை ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 

இந்தியா முழுவதும் இருக்கும் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, லக்னோ, நாக்பூர், அசன்சோல், கோயம்புத்தூர் மற்றும் ஜலந்தரில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோருக்கு இடையே India, And the TV Buying Behaviour என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவுக்கு பிந்தயை காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் அடுத்த புதிய தொலைக்காட்சியை ஆன்லைனில் வாங்க விரும்புவது தெரிய வந்திருக்கிறது.

இதற்கான காரணம் குறித்து ஆராய்ந்ததில் கட்டணச் சலுகை, கவர்ச்சிகரமான ஆஃபர்கள், வீடு தேடி வரும் பொருள் உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஆப்லைனில் Croma தொலைக்காட்சியை அதிகம் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள், இகாமர்ஸ் தளத்தில் அமேசான் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதிகமானோர் அப்கிரேடு ஆன தொலைக்காட்சியை வாங்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சவுண்ட் குவாலிட்டி மற்றும் பிக்ச்சர் குவாலிட்டி இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் விரும்புவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Flipkart Big Bachat Dhamal: இவ்ளோ விலை கம்மியாவா? அட்டகாசமான தள்ளுப்படியில் ப்ளூடூத் இயர்பட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News