பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடும் ஆண்ட்ராய்ட், IOS ஆஃப்களின் பட்டியலை பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உடன் அது வெளியிட்ட அறிக்கையில்,"இந்த ஆஃப்கள் மூன்றாம் தரப்பு ஆஃப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதால், பயனாளர்கள் புதிய ஆஃப்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள்,  பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எப்போது பாஸ்வேர்ட் திருடப்படுகிறது?


இத்தகைய தீங்குகளை விளைவிக்கும் ஆஃப்களை கண்டறிந்து, சிலர் ரிவ்யூ அளிக்கின்றனர் என்றும் அந்த ரிவ்யூகளையும் அந்த ஆப்கள் திட்டமிட்டு மறைத்து வேறு பொய்யான ரிவ்யூகளை மட்டுமே காட்டும் வகையில் செயல்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது. "ஒருவர் பிளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆஃப் ஸ்டாரில் இருந்தோ ஆஃப்களை தரவிறக்கும் செய்து அதை திறக்கும்போது, 'உங்கள் பேஸ்புக் பக்கத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்' என காட்டும். அப்போதுதான் உங்களின் தகவலை அவை திருடுகின்றன" என மெட்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  


மேலும் அந்த அறிக்கையில், "ஒருவேளை, அவர்களுக்கு உங்கள் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்கள் தெரிந்துவிட்டால், உங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் உள்நுழைந்து,  உங்கள் நண்பர்களுக்கோ அல்லது வேறு யாருக்கும் வேண்டாமானலும் மெசேஜ் அனுப்பும் வாய்ப்புள்ளது. அதில் இருக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களையும் திருட முடியும். 


மேலும் படிக்க | Netflix-Amazon Prime Video-Disney+Hotstar முற்றிலும் இலவசம்!


400 ஆஃப்கள் என்னென்ன?


எனவே, இதுபோன்ற வலையில் பயனாளிகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என பேஸ்புக் பட்டியலிட்டுள்ளது. பேஸ்புக் பக்கத்தில் இணைக்காமல் அந்த ஆஃப்-ஐ பயன்படுத்த முடியுமா என ஒருமுறை சோதித்துப்பார்க்கவும். ஒரு ஆஃப்-ஐ தரவிறக்கும்போது, அது இதற்கு முன்னர் எத்தனை முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, அதன் ரேட்டிங்ஸ், ரிவ்யூக்கள் என்னென்ன என்பதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். 


தரவிறக்கம் செய்த ஆஃப்பில் உள்நுழைந்த பிறகு அதன் முழு செயல்பாட்டை வழங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை, அந்த ஆஃப்களால் நீங்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக உங்களின் பேஸ்புக் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது. மெட்டா வெளியிட்ட பட்டியலில், பிளே ஸ்டோர் மற்றும் ஆஃப் ஸ்டார்களில் கிடைக்கும் இந்த ஆஃப்கள் போட்டோ எடிட்டர், உடற்பயிற்சி, பேஸ்புக் விளம்பர மேம்படுத்துதல் ஆகிய ஆஃப்கள் இடம்பெற்றுள்ளன. 400 ஆண்ட்ராய்ட் மற்றும் IOS ஆஃப்களின் பட்டியலை பார்க்க இதை கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க | சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ