Netflix-Amazon Prime Video-Disney+Hotstar முற்றிலும் இலவசம்!

நீங்கள் OTT-ஐப் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவற்றின் ஒரு வருட உறுப்பினர் சந்தா முற்றிலும் இலவசம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 8, 2022, 10:54 AM IST
  • ஒடிடி தளங்கள் முற்றிலும் இலவசம்
  • ஜியோ கொடுக்கும் அசத்தல் ஆஃபர்
  • நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்
Netflix-Amazon Prime Video-Disney+Hotstar முற்றிலும் இலவசம்! title=

இன்று சினிமா எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு OTT பிரபலமாக உள்ளது. நீண்ட நாட்களாக OTT தளங்களை குறைவான விலையில் நீங்கள் பயன்படுத்த விரும்பினால், இப்போது அதற்கான நேரம் அமைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு Netflix, Amazon Prime Video மற்றும் Disney + Hotstar போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. உறுப்பினர் கட்டணம் செலுத்தாமல் சந்தாவைப் இலவசமாக பெறலாம். அதற்கு நீங்கள் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும். 

இலவச OTT சந்தா 

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய மூன்று முக்கிய OTT தளங்களும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஒரு வருடத்திற்கு இலவச அம்சத்தை கொடுக்கின்றன. இந்த OTT சந்தாக்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கு விண்ணப்பித்து அதன் படிவத்தை நிரப்ப வேண்டும். 

மேலும் படிக்க | iPhone Plus: ரூ.22 ஆயிரம் தள்ளுபடி; பிளிப்கார்டில் ஐபோன் வாங்க சரியான நேரம்

ஜியோவின் பிளான்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ.399. இதில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 75 ஜிபி டேட்டா கிடைக்கும். அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டெட் குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட இலவச சந்தாவுடன் வருகிறது.

ரூ.599 திட்டத்தின் நன்மைகள்

இந்த திட்டம் உங்களுக்கு 100 ஜிபி டேட்டா, 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் ஒரு வருட இலவச சந்தா உங்களுக்கு வழங்கப்படுகிறது.

போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.799 விலை

ரூ.799 விலையில் உள்ள திட்டத்தில் 150ஜிபி டேட்டா மற்றும் 200ஜிபி ரோல்ஓவர் டேட்டா வழங்கப்படுகிறது. இது ஒரு குடும்பத் திட்டமாகும். எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் Netflix, Amazon Prime வீடியோ மற்றும் Disney + Hotstar ஆகியவற்றின் சந்தாவும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மிகவும் விலை உயர்ந்தது

ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான OTT திட்டங்களின் பட்டியலில் இது மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். ரூ.999க்கு கிடைக்கும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 200ஜிபி அதிவேக டேட்டா, 500ஜிபி ரோல்ஓவர் டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் வசதி மற்றும் மூன்று சிம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் Netflix, Amazon Prime வீடியோ மற்றும் Disney + Hotstar ஆகியவற்றின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஜியோ 5ஜி ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?... அசத்தும் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News