ஏசிக்கு நிகராக கூலிங் கொடுக்கும் பர்சனல் ஏர் கூலர்கள் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்..!
budget-friendly cooling; ஏசி வாங்குவது விலை அதிகமாக இருக்கிறது என நினைப்பவர்கள் உங்கள் வீட்டில் அதற்கு ஈடான கூலிங் கொடுக்கும் ஏர் கூலர்களை வாங்கி வைக்கலாம். இப்போது மார்க்கெட்டில் என்னென்ன ஏர்கூலர்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கோடை காலத்தின் தொடக்கத்தில் இப்போது இருக்கிறோம். அதனால் வீட்டில் ஏசி மற்றும் ஏர் கூலர் வாங்க பலரும் விரும்புகின்றனர். ஏசி அதிகமான விலை என்பதால் அதற்கு ஈடான கூலிங்கை கொடுக்கும் ஏர் கூலரை வாங்கலாம். இதில் இன்னொரு சிறப்பம்சமும் இருக்கிறது. அது என்னவென்றால் ஏர் கூலர்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கும். இப்போது மார்க்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்ககூடிய ஏர்கூலர்கள் பட்டியலை பார்க்கலாம்.
சிறந்த பர்சனல் ஏர் கூலர்கள்: விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
1. பஜாஜ் Px 97 ஏர் கூலர்
பட்ஜெட் விலையில் இருக்கக்கூடிய ஏர் கூலர்கள் பட்டியலில் பஜாஜ் ஏர் கூலர் முதலிடத்தில் உள்ளது. கூலிங் காற்றை வழங்க, இந்த மினி கூலரில் 4-வே ஆட்டோ-ஸ்விங் உள்ளது. அறைக்குள் வைத்துவிட்டால் ஒவ்வொரு மூலைக்கும் காற்றை வழங்கும். ஹெக்ஸாகூல் தொழில்நுட்பம் அறுகோண வடிவிலான குளிரூட்டி இதில் உள்ளது. அத்துடன் குறைந்தபட்ச நீர் மட்டுமே இதற்கு தேவைப்படும். 36 லிட்டர் கெப்பாசிட்டி இருக்கும் இந்த ஏர் கூலர் விலை 5999 ரூபாய். அதிக மின்சாரத்தை பயன்படுத்தாது.
2. ஹேவெல்ஸ் டுவோனோ பர்சனல் ஏர் கூலர்
இந்த ஹேவல்ஸ் ஏர் கூலர் 18 லிட்டர் டேங்குடன் வருகிறது. இவை சிறந்த குளிர்ச்சிக்கு பெயர் பெற்றவை. இந்த ஹேவல்ஸ் கூலர் ஆட்டோ ஸ்விங் பயன்முறையில் இடது-வலது என முழு அறைக்கும் காற்றோட்டத்தை வழங்க கூடியது. வேகத்தைக் கட்டுப்படுத்த, இந்த ஸ்மால் கூலரில் ஸ்பீட் நாப் கொடுக்கப்பட்டுள்ளது. ஹாவெல்ஸ் ஏர் கூலர் விலை: ரூ 5350.
3. சிம்பொனி ஐஸ் கியூப் 27 ஏர் கூலர்
27 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த சிம்பொனி ஏர் கூலர் சிறந்த தனிப்பட்ட ஏர் கூலர்களில் ஒன்றாகும். i-Pure Technology பில்டருடன் கூடிய இந்த Cooler Symphony காற்று மாசுபாடு, துர்நாற்றத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடும். மேலும், புதிய காற்றை உங்களுக்கு வழங்குகிறது. சிம்பொனி ஏர் கூலர் விலை: ரூ 5791.
4. குரோம்ப்டன் ஜினி நியோ பெர்சனல் ஏர் கூலர்- 10லி
இந்த மினி கூலர், சுற்றிலும் காற்றை சுழற்றுவதற்கு நான்கு வழி காற்று விலகலுடன் வருகிறது. குளிரூட்டும் செயல்திறனுக்காக, இந்த குரோம்ப்டன் குளிரூட்டியானது 650 m3/hr காற்று விநியோகத்துடன் ஒரு ப்ளோவர் மற்றும் ஐஸ் சேம்பர் கொண்டுள்ளது. இந்த க்ரோம்ப்டன் பர்சனல் ஏர் கூலருக்கு 130 வாட்ஸ் மட்டுமே தேவைப்படுகிறது, எனவே இந்த சிறந்த ஏர் கூலரை இன்வெர்ட்டர் பவரிலும் இயக்கலாம். குரோம்ப்டன் பர்சனல் ஏர் கூலர் விலை: ரூ 3620.
5. வி-கார்டு அரிடோ டி25 எச் ஏர் கூலர் - 25 லிட்டர்
வி-கார்டு அரிடோ டி25 எச் ஏர் கூலர் 25 லிட்டர் டேங்குடன் வருகிறது. இது சிறிய அறைகளுக்கு ஏற்றது. இந்த V Guard கூலர் இயங்கும் போது அதிக சத்தம் எழுப்பாது. வி-கார்டு ஏர் கூலர் விலை: ரூ.7745.
ஏசியை விட ஏர்கூலர் மலிவானதா?
கோடையில் ஏர் கூலரை இயக்குவது மிகவும் சிக்கனமானது. ஏனெனில் இந்த சிறந்த ஏர் கூலர்கள் ஏர் கண்டிஷனர்களை விட மிகக் குறைந்த சக்தியையே பயன்படுத்துகின்றன. எனவே தினமும் பயன்படுத்தினால்கூட உங்கள் மாதாந்திர மின் கட்டணத்தில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ