கோடையில் ஃபிரிட்ஜ் வாங்க திட்டமா? ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்... அமேசான் ஆப்பர்!

Fridge Under Rs.15,000: அமேசான் தளத்தில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் இந்த மூன்று ஃபிரிட்ஜ்கள், கோடை காலத்தில் உங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யத்தக்கதாகும்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 16, 2024, 06:28 AM IST
  • இந்த ஃபிரிட்ஜ்கள் அமேசான் தளத்தில் சலுகை விலையில் கிடைக்கிறது.
  • சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.
  • இவை அனைத்தும் ஒரே ஒரு கதவு கொண்ட ஃபிரிட்ஜ் ஆகும்.
கோடையில் ஃபிரிட்ஜ் வாங்க திட்டமா? ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்... அமேசான் ஆப்பர்!

Fridge Under Rs.15,000 In Amazon: கோடை காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும். மாணவர்கள் தங்களின் விடுமுறை  மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என நினைப்பார்கள். பெற்றோர் தங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என நினைப்பார்கள். வயதானவர்கள் வெயில் நேரத்தில் வெளியே அதிகம் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என நினைப்பார்கள்.

Add Zee News as a Preferred Source

இப்படி இந்தியாவில் கோடை காலம் என்பதே கொண்டாட்டமும், கடுப்பும் சேர்ந்து வரும் காலமாக உள்ளது. கோடை வெயிலில் இருந்து உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வதே அத்தியாவசிய தேவையாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதில் இருந்து உடலை அதிக வைத்துக்கொள்வதற்கு என்னவெல்லாம் செய்ய இயலுமோ, அதையெல்லாம் செய்வார்கள்.

ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாக ஃபிரிட்ஜ்

அந்த வகையில் கோடை காலத்தில், வீட்டில் ஃபிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர், ஃபேன் ஆகியவற்றை வாங்கவும் திட்டமிடுவார்கள். இவை அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் கோடை காலத்தில் ஒருவருக்கு மிகவும் பயன்படக்கூடியதாக அமையும். ஏசி, ஏர் கூலர், ஃபேன் ஆகியவை வீட்டில் சூட்டை வெளியேற்றி காற்றோறமாக வைத்திருக்கும். வெயில் காலங்களில் உணவு பொருள்கள் வேகமாக கெட்டுப்போகும் என்பதால் ஃபிரிட்ஜூம் உபயோகமாக இருக்கும். 

மேலும் படிக்க | Moto G4: ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவா... 8ஜிபி RAM மொபலை தேடுறீங்களா... இதோ உங்களுக்காக!

இந்நிலையில், கோடை காலத்திற்கு முன்னதாக அதாவது இந்த பிப்ரவரி மாதத்தில் நீங்கள் ஃபிரிட்ஜ் வாங்க வேண்டும் என நினைத்தால், அமேசானில் கிடைக்கும் இந்த மூன்று மாடல்களை பார்க்கலாம். இவற்றின் சிறப்பம்சங்களையும், விலையையும் தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் தேவைக்கேற்ப உள்ள ஃபிரிட்ஜை நீங்களே தேர்வு செய்யலாம். 

Godrej 180 L - 2 Star

அமேசானில் இந்த ஃபிரிட்ஜை 28 சதவீத தள்ளுபடியுடன் நீங்கள் வாங்கலாம். அதாவது, 12 ஆயிரத்து 590 ரூபாய்க்கு இதை நீங்கள் வாங்கலாம். சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டை மூலம் இதனை வாங்கும்பட்சத்தில் தனியாக நீங்கள் ரூ.1250 வரை தள்ளுபடியையும் பெறுவீர்கள். 

இந்த ஃபிரிட்ஜ் 180 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 2 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. இதில் காய்கறி வைத்துக்கொள்ள சற்றே பெரிய பகுதி கொடுக்கப்ட்டுள்ளது. இது டைரக்ட்-கூல் ஒற்றை கதவு ஃபிரிட்ஜ் ஆகும். 

Samsung 183 L - 3 Star

சாம்சங்கின் இந்த மாடல் ஃபிரிட்ஜ் சுமார் 21% தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கிறது. அதாவது, இதனை நீங்கள் 14 ஆயிரத்து 990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஃபிரிட்ஜை நீங்கள் வாங்கப்போகிறீர்கள் என்றால், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டை மூலம் 1,250 ரூபாய் வரை தனியே தள்ளுபடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஃபிரிட்ஜ் 183 லிட்டர் கொள்ளளவு கொண்டது. குறிப்பாக, 18 லிட்டர் உறைவிப்பான் திறன் (Freezer) மற்றும் 165  உணவு திறன் என இரு பிரிவை கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஃபிரிட்ஜ் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இதில் டிஜிட்டல் இன்வெர்ட்டர் இடம்பெற்றது. மேலும், டைரக்ட்-கூல் ஒற்றை கதவு ஃபிரிட்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Whirpool 184 L - 2 Star

இந்த ஃபிரிட்ஜை அமேசானில் நீங்கள் 19% தள்ளுபடியுடன் வாங்கலாம். அதாவது, 12 ஆயிரத்து 540 ரூபாய்க்கு கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில வங்கி அட்டை மூலம் இந்த ஃபிரிட்ஜை வாங்கினால் 1250 ரூபாய் வரை தனி தள்ளுபடியும் கிடைக்கும். 

இது 184 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிரிட்ஜ். மேலும் இது 2  ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. டைரக்ட்-கூல் ஒற்றை கதவு ஃபிரிட்ஜ் ஆகும்.

மேலும் படிக்க | 2024 ஜனவரியில் இத்தனை லட்சம் பைக்குகள் விற்பனையா... எந்த நிறுவனம் டாப்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News