1. பைக் தேர்வு 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பைக் தேர்வு என்பது முக்கியம். உங்களின் மனதுக்கு பிடித்தமான பைக் என ஒன்று இருக்கும். அதனை வாங்குவது தான் உங்களின் இலக்காக இருக்கும். இந்த இடத்தில் அந்த பைக்கை வாங்க வேண்டும் என்ற யோசிக்கும்போது, அந்த பைக்கைப் பற்றி அனைத்து விஷயங்களையும் ஆராய்திருப்பீர்கள். இதுவரை செய்யவில்லை என்றால், நீங்கள் வாங்க விரும்பும் பைக்கின் சாதக பாதங்களை தெரிந்து கொள்ளுங்கள். எந்த நிறத்தில் வாங்க விரும்புகிறீர்கள், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். 


மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்கும் போது தவிர்க்க வேண்டிய 5 மிகப்பெரிய தவறுகள்


2.  சிறந்த டீலரைக் கண்டறியவும்


உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பைக் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தவுடன், பைக்கை விற்பனை செய்யும் சிறந்த டீலரை நீங்கள் தேட வேண்டும். வெவ்வேறு டீலர்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களைக் கொண்டுள்ளனர். பண்டிகைக் காலத்திலோ அல்லது ஆண்டின் இறுதியிலோ வாங்கினால், நீங்கள் வாங்க விரும்பும் பைக்கிற்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். மூன்று நான்கு டீலர்களை நீங்கள் பார்த்திருந்தால், பேரம் பேச உங்களுக்கு உதவியாக இருக்கும். இலவச பைக் பாகங்கள் மற்றும் சேவைகளுக்கு பேரம் பேச வேண்டும். 



3. பைக் நிதி விருப்பங்கள்


பைக் வாங்க வேண்டும் என விருப்பம் உள்ள இளைஞர்கள், பணத்தை சேமித்து வாங்குவது தான் நல்லது. ஒருவேளை வேலைக்கு செல்பவராக இருந்து, உடனடி பைக் தேவையாக இருந்தால் நீங்கள் வாகனம் வாங்கும் டீலர்களே பைனான்ஸூக்கும் ஏற்பாடு செய்து தருவார்கள். அது உங்களுக்கு உகந்த வகையில் இருந்தால் பரவாயில்லை. இல்லையென்றால், உங்களுக்கு தெரிந்த பைனான்சியர்களிடம் நிதி பெற்று வாங்கிக் கொள்ளலாம். பைக் விற்பனை செய்யும் டீலர் சொல்லும் பைனான்சியரிடம் தான் கடன் வாங்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. 



4. தனிநபர் கடன் விண்ணபிக்கலாம்


வேலைக்கு செல்பவர்களுக்கு தனிநபர் கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. பைனான்சியர்களிடம் பணம் பெற்று பைக் வாங்குவதை விட, தனிநபர் கடன் பெற்று வாகனம் வாங்குவது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். தனிநபர் கடனை இஎம்ஐயாக, உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய அம்சமும் உண்டு. முறையாக வங்கிக் கடனை நீங்கள் செலுத்தினால், அடுத்தடுத்து கடன் கொடுக்க வங்கிகள் தயாராக இருக்கும். 


மேலும் படிக்க | Amazon Summer Sale: ரூ.53,000 மதிப்புள்ள 1.5 டன் ஏசி ரூ.31,000 விலையில்


5. பைக் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவும்


இந்தியாவில் பைக் மற்றும் கார் இன்சூரன்ஸ் கட்டாயம். நீங்கள் பைக்கை வாங்கியவுடன், உங்கள் டீலரிடமிருந்து ஒரு நல்ல பைக் இன்சூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பிக்கலாம். பெரும்பாலான டீலர்கள் காப்பீட்டாளர்களுடன் டை-அப் வைத்துள்ளனர். எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ற நல்ல பாலிசியை நீங்கள் பெற முடியும். உங்கள் பைக்கினால் ஏற்படும் விபத்துகள் அல்லது பிறருக்கு விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ மற்றும் சட்டப்பூர்வ பொறுப்புகளை உள்ளடக்கும் விரிவான பைக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யவும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR