ஸ்மார்ட்போன் மாடல்கள் நிறைய இருப்பதால், தங்களுடைய தேவைக்கு எந்த போன் தேவை என்பதை தெரியாமல் சிலர் வாங்கிவிடுகின்றனர். யாருக்கு என்ன தேவையோ? அந்த ஸ்மார்ட்களை தேடி வாங்குவது தான் சிறப்பு. இந்த தவறை பலரும் பொதுவாக செய்து கொண்டே இருக்கின்றனர். இவை தவிரவும் சில விஷயங்களை ஸ்மார்ட்போன் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
Android vs iPhone
போன் வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் ஆண்ட்ராய்டு போன் வாங்கலாமா? அல்லது ஐபோன் வாங்கலாமா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் கூட ஐபோன் வாங்க வேண்டும் என இலக்கு வைத்து அதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, ஐபோன், எளிமை மற்றும் தனிநபர் தகவல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். ஆண்ட்ராய்டு போன்கள் விலை குறைவு மற்றும் கட்டுபாடு உள்ளிட்ட அம்சங்களில் பெஸ்டாக இருக்கும். சில செயலிகளை தாராளமாக பயன்படுத்தக்கூடிய அம்சம் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே உள்ளது.
மேலும் படிக்க | Amazon Summer Sale: ரூ.53,000 மதிப்புள்ள 1.5 டன் ஏசி ரூ.31,000 விலையில்
உங்கள் தேவை என்ன?
உங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் வாங்குவது என்பது ஸ்மார்ட்டான முடிவு. போட்டோகிராபர் அல்லது வீடியோ கிராபராக இருந்தால், கேமரா பெஸ்ட் குவாலிட்டியில் இருக்கும் போன்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஆஃபீஸ் வொர்குகளை மொபைல் வழியாக முடித்துவிட வேண்டும் என எண்ணுபவர்கள், அதற்கு ஏற்ற போன்களை தேர்ந்தெடுப்பது உகந்தது. மேலும், விலை உங்களுக்கு பொருட்டாக இருக்கும்பட்சத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற போனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன் விலை
ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை மலிவு விலை முதல் லட்சங்கள் வரை கிடைக்கின்றன. உங்கள் பட்ஜெட் என்ன? என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அந்த பட்ஜெட்டில் நீங்கள் தேடும் அம்சங்களைக் கொண்டிருக்கும் போனை தேர்ந்தெடுங்கள். இல்லையென்றால், விலை உயர்ந்த, நீங்கள் விரும்பும் அம்சங்கள் இல்லாத போனை வாங்க நேரிடும். கடைகளுக்கு செல்தவற்கு முன்பே போன் பற்றிய தெளிவுடன் செல்வது நல்லது. இந்த விஷயத்தில் நீங்கள் கோட்டைவிட்டால் பட்ஜெட் காலியாகிவிடும்.
மேலும் படிக்க | அசத்தல் ஆஃபரில் அமேசானில் கிடைக்கும் 5 மினி ஃபேன்கள்
ஸ்மார்ட்போன் வாங்க நேரம்
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவதற்கு சரியான நேரம் பண்டிகை காலம் மற்றும் ஆண்டு இறுதி மாதங்கள். இந்த நேரங்களை உங்களுக்கான ஸ்மார்ட்போனை வாங்க முடிவு செய்யுங்கள். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு உகந்த நேரம் அல்ல. பெரிய தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் போன்கள் விற்பனை செய்யும் நேரத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR