ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்: ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன மற்றும் பயனர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. அந்த வகையில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வது பிரச்சனையாக இருந்தால், தற்போது ஏர்டெல் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின்படி, ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், மூன்று மாதங்கள் வரை வேலிடிட்டியை நீங்கள் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல்லின் இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்: ஏர்டெல்லின் இந்த புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.839 ஆகும். ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் ரூ.300 முதல் ரூ.400 வரை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, மொத்தமாக ரூ.839க்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வரை வேலிடிட்டியைப் பெறலாம்.


மேலும் படிக்க | 84 நாட்களுக்கு இனி உங்களுக்கு டென்ஷன் இல்லை! ஏர்டெல்லின் அட்டகாசமான ரீச்சார்ஜ் பிளான் 


என்ன நன்மைகளைப் பெறலாம்: இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த மூலைக்கும் காலிங்கை மேற்கொள்ள முடியும். இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதுமட்டுமின்றி, இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல சிறந்த நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. 


கூடுதலாக இது தவிர, வாடிக்கையாளர்களும் பல வசதிகளைப் பெறுகிறார்கள். அதில் நீங்கள் Airtelextrem மொபைல் பேக்கைப் பெறுவீர்கள். Apollo 24/7 தவிர, உங்களுக்கு Rewardz மினி சந்தாவும் வழங்கப்படுகிறது. Wynk மியூசிக் சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.


இதற்கிடையில் சமீபத்தில் ஏர்டெல் தனது ரூபாய் 99 ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 155 ரூபாயாக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ரூ.200-ஐ விட குறைந்த விலையில் செம ஸ்பீட்: ஏர்டெல், ஜியோவுக்கு தலைவலியாய் வந்த திட்டம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ