டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்-அப் சேவை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களிடையே மிகுந்த பிரபலமான வாட்ஸ்-அப் சேவை சில போன்களில் இனி செயல் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 


குறிப்பிட்ட சில மொபைல்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை காண்போம். சிம்பியன் ஓஎஸ் கொண்ட மொபைல்களைப் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிடுங்கள். சிம்பியன் ஓஎஸ் தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் சில தொழில் நுட்ப வசதி இல்லாத காரணத்தால் வாட்ஸ்-அப் சேவை அளிக்கப்படமாட்டாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


வாட்ஸ்-அப் சேவை முடக்கப்பட உள்ள மொபைல்களின் விவரம்:- அண்ட்ராய்டு2.1, அண்ட்ராய்டு 2.2, பிளாக்பெர்ரி OS, பிளாக்பெர்ரி-10, நோக்கியா-s40, நோக்கியா-S60, விண்டோஸ் தொலைபேசி-7.1, ஆப்பிள் ஐபோன்- 3GS மற்றும் ஐபோன்- 6iOS.நோக்கியா -E6, நோக்கியா- 5233, நோக்கியா-C5 03, நோக்கியா ஆஷா- 306, நோக்கியா E52 போன்ற நோக்கியா மாடல்களில் இனி வாட்ஸ்-அப் வசதி தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.