ஜியோவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் இந்தியாவின் மற்றொரு டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சூப்பரான ரீச்சார்ஜ் பிளான்களை வைத்திருக்கிறது. தற்போது 5ஜி சேவையிலும் களம் கண்டுள்ளது. 4ஜிக்கு பிறகு வந்திருக்கும் அடுத்த தலைமுறை இணைய வேகத்தை கொடுக்க இருக்கும் 5ஜி அடுத்தடுத்த ஆண்டுகளில் கோலோச்ச இருக்கிறது. இதற்கு ஏற்ப ஏர்டெல் நிறுவனும் தங்களை தயார்படுத்திக் கொண்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சூப்பரான ஓடிடி பிளான்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்தால் கூடவே பல்வேறு சலுகைகளையும் பெறுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் ப்ரீபெய்டு ஆஃபர்


ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்டு ரீச்சார்ஜ் மூலம் அமேசான் பிரைம், டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் இலவச சந்தாவை நீங்கள் பெற விரும்பினால், உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப பல்வேறு விலைகளில் சூப்பரான பிளான்களை வைத்திருக்கிறது ஏர்டெல். அந்த திட்டங்களை ரீச்சார்ஜ் செய்தால் 3 மாதம் முதல் ஒருவருடம் வரை நீங்கள் அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பார்த்து ரசிக்கலாம். 


ஏர்டெல் postpaid ஆஃபர்


ஏர்டெல் ரூ.499 பிளான்


ஏர்டெல் போஸ்ட்பெய்டு ரூ.499 திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால் மாதம் 75ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 6 மாதம் Amazon Prime மெம்பர்ஷிப், ஒரு வருடம் Disney+Hotstar மொபைல் சந்தா இலவசமாக பெறலாம். 


மேலும் படிக்க | ஜியோ 5ஜி நெட்வொர்கை 5ஜி மொபைலில் யூஸ் பண்ண முடியாது


ஏர்டெல் ரூ.1,199 பிளான்


ரூ.1,199 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 3 தளங்களின் சந்தாவையும் பெறலாம். அதுமட்டுமல்லாமல், சப்ஸ்கிரிப்சனை 3 நபர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். 150ஜிபி மாதாந்திர டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம். கூடுதலாக Netflix basic பிளான், 6 மாதம் Amazon Prime சந்தா, 1 வருடம் Disney+ Hotstar மொபைல் சந்தா இலவசமாக கிடைக்கும்.


ஏர்டெல் ரூ.1,499 பிளான் 


இந்த திட்டத்தில் 200ஜிபி மாதாந்திர டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 6 மாதம் Netflix standard சந்தா மற்றும் Amazon Prime மெம்பர்ஷிப் கிடைக்கும். இதோடு 1 வருடம் Disney + Hotstar மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. மேலும், Netflix premium பயனப்படுத்த விரும்புபவர்கள் கூடுதலாக ரூ.150 செலுத்தி பயன்படுத்தலாம். 4 பேர் இந்த சப்ஸ்கிரிப்சனை பகிர்ந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆட்டம் கண்ட ட்விட்டர்... முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ