எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆட்டம் கண்ட ட்விட்டர்... முழு விவரம்!

ட்விட்டர் சமூக வலைதளம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் பயனர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 4, 2022, 12:14 PM IST
  • ட்விட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இன்று முதல் தொடங்கியுள்ளது.
  • ட்விட்டரை சீரமைப்பதில் தீவிரம் காட்டுவதாக எலான் மஸ்க் தெரிவிக்கிறார்.
  • தற்போது நிலைமை சீராகி வருவதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஆட்டம் கண்ட ட்விட்டர்... முழு விவரம்! title=

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில், ட்விட்டரை வாங்கிவிட்ட பின், அதை சுற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வட்டமிட்டு வந்தன. ட்விட்டர் ஊழியர்களின் நிலை, தலைமை பொறுப்பாளர்களின் நீக்கம், ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம் என தினமும் எலான் மஸ்க் ஒரு குண்டை போட்டுக்கொண்டேதான் இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை முதல் இந்தியாவில் ட்விட்டர் பலருக்கும் பிரச்சனையாக உள்ளது என வேறு சில சமூக வலைதளங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ட்விட்டர் முகப்பு பக்கத்தை திறக்க முயற்சித்தால், "Something went wrong, but don't worry - try again" (ஏதோ பிரச்சனை, கவலைப்படாதீர்கள் - மீண்டும் முயற்சியுங்கள்) என்ற பாப்அப் மெசேஜ் காட்டிகிறது என சிலர் பதிவிட்டிருந்தனர். 

மேலும், "I'm unable to access Twitter and getting an error prompt...Something went wrong, but don't fret -- let's give it another shot. Try again" என காட்டுவதாகவும் வேறு ஒரு சமூக வலைதள பயனர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!

இந்த பிரச்சனை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து உள்ளதாகவும், காலை 7 மணியளவில் இந்த பிரச்சனை அதிகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போது நிலைமை சீராகி வருவதாகவும் தெரிகிறது. மிகப்பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், ட்விட்டரில் இந்த பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. 

ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்க உள்ளதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க நேரப்படி, நவம்பர் 4ஆம் தேதி காலை 9 மணியளவில்,  ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வரும் என்றும், அவர்கள் பணியில் தொடர்வார்களா அல்லது நீக்கம் செய்யப்படுவார்கள் அந்த மின்னஞ்சலில் வரும் மெமோவில் குறிப்பிடப்படும் என தெரியவருகிறது. தற்காலிகமாக, ட்விட்டர் ஊழியர்களுக்கான அடையாள அட்டையின் செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ட்விட்டரின் சுமார் 7,500 பேர் கொண்ட பணியாளர்களில் பாதி பேரை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் ஆட்குறைப்பில் ஈடுபட உள்ளதாக எலான் மஸ்க் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். எலோன் மஸ்க் ட்விட்டரை சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கு (44 பில்லியன் அமெரிக்க டாலர்) வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ₹3.5 லட்சம் கோடி... $44 பில்லியன் டாலர்... பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News