ஜியோ 5ஜி நெட்வொர்கை 5ஜி மொபைலில் யூஸ் பண்ண முடியாது

நீங்கள் 5ஜி மொபைல் வைத்திருந்தாலும், ஜியோ 5ஜி நெட்வொர்கை பயன்படுத்த முடியாது ஏன்? என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2022, 03:08 PM IST
ஜியோ 5ஜி நெட்வொர்கை 5ஜி மொபைலில்  யூஸ் பண்ண முடியாது title=

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருக்கும் ஜியோ தற்போது டெல்லி , மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் வாரணாசி பகுதிகளில் 5ஜி சேவையை கொடுத்து கொண்டிருக்கிறது. 5ஜி மொபைல் வைத்திருப்பவர்கள் மட்டுமே 5ஜி சேவையை பெற முடியும் என்றாலும், அவர்களில் பெரும்பாலானோரால் 5ஜி சேவையை பெற முடியவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதற்காக வாடிக்கையாளர்கள் 5ஜி சிம்கார்டு வாங்க தேவையில்லை. 4ஜி சிம்கார்டை 5ஜி நெட்வொர்கிற்கு நேரடியாக அப்கிரேடு செய்து கொள்ளலாம். 

மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் மறந்தும் கூட இந்த வேலையை செய்யாதீர்கள்

தற்போது 5ஜி சேவைகளுக்கு புதியதாக கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை. 4ஜி சேவை வழியாகவே 5ஜி அணுகல் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது 5 நகரங்களில் கிடைக்கும் 5ஜி இணைய சேவையை, 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்த ஜியோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், ஜியோ 5ஜி சேவையை, 5ஜி மொபைலில் கூட பயன்படுத்த முடியாததற்கு முக்கிய காரணம், நீங்கள் ஜியோவின் எந்த ரீச்சார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஏற்கனவே கூறியது போல் ஜியோ 5ஜி சேவைக்கு பிரத்யேக திட்டம் எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், 4ஜி திட்டத்தில் 5ஜி சேவையை கொடுக்கும் பிளான்களை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ.239 திட்டத்துக்கு மேல் இருக்கும் பிளான்களை தேர்ந்தெடுத்தால் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும். அதேநேரத்தில், 5ஜி அப்டேட்டை ஸ்மார்ட்போன்கள் வெளியிடும்போது, அதனை வாடிக்கையாளர்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே 5ஜி சேவையை எந்த பிரச்சனையும் இன்றி பெற முடியும்.

மேலும் படிக்க | 30 மணி நேரம் பயன்படுத்தலாம்... விலை 600 மட்டுமே - புதிய இயர்போன் அறிமுகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News