ஏர்டெல் அட்டகாசம்: இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ. 6000 கேஷ்பாக்
Airtel Cashback Offer: அட்டகாசமான ஒரு சலுகை பயனர்களுக்கு ஏர்டெல்லில் கிடைக்கிறது. இதன் மூலம் 6000 கேஷ்பேக் பெறும் வாய்ப்பும் உள்ளது.
ஏர்டெல் 6000 கேஷ்பேக் ஆஃபர் விவரங்கள்: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்து, உங்களுக்கு தள்ளுபடியைத் தவிர ரூ.6 ஆயிரம் பம்பர் கேஷ்பேக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு இப்போது வந்துள்ளது. அத்தகைய சலுகையை ஏர்டெல் பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை யார் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஏர்டெல் 6000 கேஷ்பேக் சலுகை: விவரங்கள் என்ன?
முதலில் ஏர்டெல் 6000 கேஷ்பேக் சலுகை என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்தச் சலுகையை ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் 2021ல் தொடங்கியுள்ளது. இந்த சலுகையில், 4ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இருந்தது. அவற்றை வாங்கும் பயனர்களுக்கு ரூ.6,000 கேஷ்பேக் வழங்கப்பட்டது.
ஸ்மார்ட்போனை வாங்கிய 30 நாட்களுக்குள் இந்தச் சலுகையைப் பெற வேண்டும். இந்த சலுகை இன்னும் தொடர்கிறது. மேலும் ஏர்டெல் பத்து புதிய ஸ்மார்ட்போன்களுடன் இந்த சலுகையில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியலை புதுப்பித்துள்ளது.
இதன் மூலம் 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும்
இந்த கேஷ்பேக்கை எப்படிப் பெறுவது? இதன் செயல்முறையைப் பற்றி விரிவாகக் காணலாம். ஏர்டெல் இந்த 6 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக்கை பயனர்களின் கணக்கில் இரண்டு பகுதிகளாக அனுப்புகிறது. ஏர்டெல் பயனர்கள் தொடர்ந்து 18 மாதங்களுக்கு ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டங்களை வாங்கும் போது ஏர்டெல் இந்த கேஷ்பேக்கின் முதல் பகுதி அதாவது 2000 ரூபாயை வாடிக்கையாளர்களின் கணக்கில் டிரான்ஸ்ஃபர் செய்கிறது. மூன்று ஆண்டுகள் அல்லது 36 மாதங்களுக்கு பயனர் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் போது மீதமுள்ள நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினால் கேஷ்பேக் கிடைக்கும்
இந்த சலுகையின் கீழ், ஏர்டெல் பயனர்களுக்காக பத்து புதிய ஸ்மார்ட்போன்களை பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் ரூ.6 ஆயிரம் கேஷ்பேக் பெற தகுதி பெறுவார்கள். ஏர்டெல் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், Itel A16 Plus, Itel A17, Itel A37, Itel P17, Nokia C01 Plus, Xiaomi Poco M3 Pro 5G, Tecno Pop6 Pro, Infinix Smart 6 HD, Motorola Moto G22 மற்றும் Oppo A16E ஆகியவை ஆகும்.
இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
இந்தச் சலுகையைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. இந்த கேஷ்பேக் உங்கள் கணக்கை அடைய சுமார் 90 நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் கேஷ்பேக் பெற விரும்பினால், அதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
மேலும், உங்கள் கேஷ்பேக் மாற்றப்படும் கணக்கு ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் கணக்காக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களிடம் இந்த கணக்கு இல்லையென்றால், ஏர்டெல் தெங்ஸ் செயலி மூலம் அதைத் திறக்கலாம்.
மேலும் படிக்க | ஜூலையில் கேஜெட் மழை! அறிமுகமாகும் 5G ஸ்மார்ட்போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR