இந்தியாவில் 5ஜி அலைவரிசைக்கான ஏலம் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய நிலையில், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் அதில் பங்கேற்றன. இந்தியாவின் 19 பில்லியன் டாலர் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்ததாக, ஏர்டெல் நிறுவனம் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.88,078 கோடிக்கும், ஏர்டெல் நிறுவனம் 19,867 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.43,084 கோடிக்கும் வாங்கியது. அதற்கு அடுத்தபடியாக வோடஃபோன் நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் நாட்டில் அதிக கட்டண திட்டங்களுடன் 5ஜி சேவைகளை (5G Network) வழங்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய பேட்டியின் போது பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அகில் குப்தா தெரிவித்தார். ஏர்டெல் நிறுவனம் சூப்பர்ஃபாஸ்ட் நெட்வொர்க்கிற்கு பிரீமியம் தொகை வசூலிக்கவில்லை என்றாலும், அதிக கட்டணத்தில் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்றும், தரவு நுகர்வு அதிகரிக்கும் போது வரவிருக்கும் நெட்வொர்க்கிற்கு தங்கள் திட்டத்தை மேம்படுத்த பயனர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் குப்தா கூறினார்.


மேலும் படிக்க | 1G முதல் 5G வரை; உலகையே மாற்றப் போகும் 5G கடந்து வந்த பாதை


உலகளாவிய விகிதங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கட்டணத் திட்டங்கள் மிகவும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட குப்தா, பயனர்கள் மிக வேகமான இணைய வசதியுடன் அதிக டேட்டாவைப் பயன்படுத்துவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக வருவாயை அளிக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த வார தொடக்கத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் முடிவடைந்த 5ஜி ஏலத்தில் வாங்கிய அலைக்கற்றைக்கான நிலுவைத் தொகையாக ரூ.8,312.4 கோடியை தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் விரைவில் 5G சேவைகளை வெளியிட உள்ளதால், பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் எடுத்த ஒரு ஆய்வில், சுமார், 89 சதவீதம் பேர் 5ஜி நெட்வொர்க்கிற்கு மேம்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும் ?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ