இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும் ?

5G Price in India : இந்தியாவில் 5-ஜி இணைய சேவைக்கான கட்டணம் 4-ஜி சேவைக்கான கட்டணத்தை விட 10-ல் இருந்து 12% வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 27, 2022, 06:19 PM IST
  • 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடக்கம்
  • இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை
  • 4-ஜியை விட கட்டணம் 10% உயர வாய்ப்பு
 இந்தியாவில் 5-ஜி கட்டணம் 4ஜி கட்டணத்தை விட எவ்வளவு உயரும் ? title=

இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன்-ஐடியா மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், அதானி எண்டர்பிரைசஸ் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கலந்துகொண்டுள்ள நிலையில், மற்ற 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5-ஜி சேவையைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

இதனால் 5-ஜி சேவையின் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு பயனாளர்களிடையே எழுந்துள்ளது.  கடந்த மார்ச் மாதம், ஏர்டெல் சிடிஓ ரந்தீப் செகோன் அளித்த பேட்டியில், 4-ஜி மற்றும் 5-ஜி சேவைக்கு இடையே கட்டணத்தில் அதிக வித்தியாசம் இருக்காது என்று கூறினார். அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகே தங்களால் கட்டணம் குறித்து எதையும் உறுதியாகக் கூற முடியும் எனவும் ரந்தீப் செகோன் கூறினார்.

மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்

4-ஜியின் வேகத்தை விட 5-ஜியின் வேகம் 10 மடங்கு வரை வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் 5-ஜி அலைக்கற்றைக்கான ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 20 ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில், ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வரும் 14-ம் தேதிக்குள் ஏலம் நிறைவடையும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 

டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் 5-ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இந்தியாவில் விரைவில் 5ஜி - ஏலத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News