ரீசார்ஜ் திட்டத்துடன் இலவச ஓடிடி வேண்டுமா? இந்த திட்டங்களை தேர்வு செய்யவும்!
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் பயனர்களுக்கு குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றனர். அவற்றுடன் சில ஓடிடியும் இலவசமாக கிடைக்கிறது.
பயனர்களுக்காக பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. புத்தாண்டை முன்னிட்டு இந்த நிறுவனங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த திட்டங்களில் கால் மற்றும் அதிவேக டேட்டா மட்டும் இல்லாமல் Disney+ Hotstar ஓடிடிக்கான அணுகளும் கிடைக்கிறது. இதில் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் முதல் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளை கண்டு மகிழலாம். இந்த ரீசார்ஜ் திட்டங்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு விலைகளில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அதிவேக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் கிடைக்கிறது.
ரூபாய் 499 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மூன்று மாதங்களுக்கு இலவசம்.
ரூபாய் 869 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மூன்று மாதங்களுக்கு இலவசம்.
ரூபாய் 3359 திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் இலவசமாக கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்ட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு விலைகளில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இதில் அதிவேக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான அணுகல் கிடைக்கிறது.
ரூபாய் 401 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 மாதத்திற்கு இலவசம்.
ரூபாய் 949 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 84 நாட்களுக்கு இலவசம்.
ரூபாய் 999 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 3 மாதங்களுக்கு இலவசம்.
ரூபாய் 2599 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் கிடைக்கிறது. இவற்றுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்ட பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான அணுகலை அதன் சூப்பர் ஸ்டார் 300 திட்டத்தின் மூலம் வழங்குகிறது.
மேலும் படிக்க | ஜியோவின் புத்தாண்டு பரிசு.. ரூ.2025 ரீசார்ஜில்... ரூ.2150-க்கான கூடுதல் பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ