Airtel வெளியிட்டது 2 சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! 5GB டேட்டா வெறும் 78 ரூபாய்க்கு!
Airtel வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு சிறப்பு Data Add-On Pack கொண்டு வந்துள்ளது.
புது டெல்லி: Airtel வாடிக்கையாளர்களின் வசதிக்காக இரண்டு புதிய Airtel Data Add-On Pack அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டதின் விலை 78 ரூபாய் மற்றும் 248 ரூபாய் ஆகும்.
ஏர்டெல்லின் இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய தரவுகளுடன் Wynk Premium இலவச சந்தாவைப் தருகிறது. ஏர்டெல் (Airtel) சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களை ஈர்க்க Amazon Prime வீடியோ மொபைல் பதிப்பில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Prepaid Plans) திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ALSO READ | Airtel, Jio அறிமுகம் செய்யும் Li-Fi Connection: Wi-Fi-ஐ விட 20% அதிக வேகம்!
இந்த அம்சங்கள் 78 ரூபாய் திட்டத்தில் கிடைக்கும்
ஏர்டெல்லின் ரூ .78 ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 5 ஜிபி அதிவேக தரவுகளுடன் Wynk பிரீமியத்தின் இலவச சந்தாவைப் தருகிறது. Add-Free Music மற்றும் வரம்பற்ற பாடல் பதிவிறக்கத்திற்கான Wynk பிரீமியத்திற்கான இந்த அணுகல் 1 மாதமாகும்.
ரூ .248 திட்டத்தின் சலுகைகள் என்ன?
248 ரூபாய்க்கு 25 ஜிபி தரவு கிடைக்கும்.
தரவுகளுடன் இலவச Wynk பிரீமியம் சந்தா கிடைக்கும்.
Add- free Music மற்றும் வரம்பற்ற பாடல் பதிவிறக்கம் வசதி
1 வருடம் Wynk பிரீமியம் சந்தா கிடைக்கும்.
ALSO READ | WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR