ஏர்டெல் யூஸ் பண்றிங்களா! உங்களுக்கு தான் முதலில் 5ஜி; அதுவும் 4ஜி விலையில்...

சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இன்று முதல் 5ஜி சேவையை பெறலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இருப்பினும், தற்போது, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம், 5ஜி சேவை இந்தியாவில் வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஏர்டெல் பெற்றது. இந்நிலையில், இந்திய மொபைல் மாநாட்டில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் பங்கேற்றார். 5ஜி சேவையை தொடங்கிவைப்பதற்கு முன்னர் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர்,"பிரதமர் மோடி இன்று 5ஜி சேவையை தொடங்கிவைக்கிறார். ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை டெல்லி, மும்பை வாரணாசி, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் பெறாலம். மேலும், அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பல்வேறு நகரங்களுக்கும், 2024 மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ஏர்டெல் வழங்கும்" எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கவலை வேண்டாம்... அம்பானி உறுதி - அனைவருக்கும் 5ஜி!
மேலும், சென்னை, ஹைதராபாத், சிலிகுரி ஆகிய நகரங்களும் முதல் 8 நகரங்களில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போதுவரை 4ஜி சேவைக்கான கட்டணம்தான் 5ஜி சேவைக்கும் வசூலிக்கப்படும் என்றும் 5ஜி சேவைக்கான கட்டணம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ரன்தீப் சிங் செகோன் கூறுகையில்,"5ஜி சேவைக்காக, எங்களின் செல்ஃபோன் கோபுரங்களில் சில உபகரணங்களை பொருத்த வேண்டும். படிப்படியாக அந்த பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். இன்று முதல், உபகரணங்கள் பொருத்தப்பட்ட கோபுரங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு 5ஜி சேவை கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் 5ஜி மொபைல் இருந்தால் போதும், அவர்களால் 5ஜி தேவையை பயன்படுத்த முடியும்" என்றார்.
5ஜி ஏலம் முடிந்த கையுடன் ஏர்டெல் நிறுவனம் எரிக்சன், நோக்கியா, சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி சேவைக்கு தேவையான உபகரணங்களை வாங்கியது.
900 MHz, 1800 MHz, 2100 MHz, 3300 MHz and 26 GHz ஆகிய 5ஜி அலைக்கற்றைகளில் மொத்தமாக 19,867.9 MHz அலைக்கற்றைகளை ஏர்டெல் நிறுவனம் ஏலத்தில் வாங்கியுள்ளது. 43,084 கோடி ரூபாய்க்கு இந்த ஏலத்தை ஏர்டெல் நிறுவனம் முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவில் இன்று முதல் 5 ஜி சேவை! தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ