இவ்வளவு கம்மி ரீசார்ஜில் இத்தனை நன்மைகளா..கெத்து காட்டும் ஏர்டெல்
Recharge Offer: அவசர காலங்களில், உங்களுக்கு காலிங் அல்லது மெசேஜ் செய்ய வேண்டுமானால், இந்த ரீசார்ஜ் திட்டங்களின் உதவியுடன் நீங்கள் செய்துக்கொள்ளலாம்.
ஏர்டெல் டாப்-அப்: ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை அவ்வபோது வழங்கி வருகின்றது. இதில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பல அற்புத திட்டங்கள் உள்ளது, ஆனால் பல நேரங்களில் உங்கள் அன்லிமிடெட் திட்டத்தின் வேலிடிட்டி போது, நீங்கள் திடீரென்று காலிங் அல்லது மெசேஜை செய்ய முடியாமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக காலிங் அல்லது மெசேஜ் அனுப்ப விரும்பினால், சில திட்டங்கள் உங்களுக்கு மலிவு விலையில் ஏர்டெலால் வழங்கப்படுகின்றன, அவற்றில் சிலவற்றைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.
இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் என்ன?
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் டாப் அப் ரீசார்ஜை வழங்குகிறது, இதில் நீங்கள் 10 ரோப்பாய் திட்டத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் 7.47 ரூபாய் டாக்டைமைப் பெறுவீர்கள், இதை நீங்கள் காலிங் மற்றும் மெசேஜ் இரண்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், அதே நேரத்தில் 20 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில், நீங்கள் 14.95 ரூபாய் டாக்டைமைப் பெறுவீர்கள், இதையும் நீங்கள் காலிங் மற்றும் மெசேஜ் இரண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஜியோ பிளஸ் சந்தா இலவசம்! புதிய திட்டத்தில் ஆஃபர்களை அள்ளி வீசிய ஜியோ..!
இந்தத் திட்டத்தின் விலையும் 20 ரூபாய்க்கு குறைவாக உள்ளது
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.19 ஆகும். திடீரென்று இன்டர்நெட் டேட்டா முடிந்துவிட்டால், அந்த நேரத்தில் இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்து இணையத் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தின் விவரங்கள் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்தத் திட்டத்தில் பலன்கள் அதிகம் இல்லை என்றாலும், இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து நன்மைகளும் மிகவும் சிறப்பானவை, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் முழு 1 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள், இந்த டேட்டாவை நீங்கள் நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 1 நாளுக்கு மட்டுமே, அத்தகைய சூழ்நிலையில், இந்தத் தரவை 1 நாளுக்கு மேல் பயன்படுத்த முடியாது. எனவே இந்த ரூ.19 ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படும் டேட்டாவை 1 நாள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ