ஒரே ரீசார்ஜில் முழு 56 நாட்கள் ஜாலி! எல்லாமே இலவசம், அசத்தும் ஏர்டெல்

Airtel Recharge Plan: ஏர்டெல்லின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட் ஆகும். ஏனெனில் இதன் விலை மிகவும் குறைவு, மேலும் அதன் செல்லுபடி காலம் அற்புதமோ அற்புதம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 14, 2023, 02:17 PM IST
  • ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
  • இதில் என்ன சிறப்பு என்பதை பார்ப்போம்.
ஒரே ரீசார்ஜில் முழு 56 நாட்கள் ஜாலி! எல்லாமே இலவசம், அசத்தும் ஏர்டெல் title=

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை வழங்குகிறது, இது சிக்கனமானது மட்டுமல்ல, இதில் கிடைக்கும் நன்மைகள் எந்த விலையுயர்ந்த திட்டத்தையும் போலவே இருக்கும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பவில்லை என்றால், இன்று உங்களுக்காக ஏர்டெல்லின் மலிவு விலையில் இருக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பற்றி தெரிவிக்கயுள்ளோம். இந்த திட்டத்தின் விலை 600 ரூபாய்க்கும் குறைவானது ஆனால் அதன் செல்லுபடியாகும் காலம் மிக அதிகமாகும். நீங்களும் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால், இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி இன்று நாம் காண உள்ளோம்.

இதில் என்ன திட்டம் மற்றும் சிறப்பு என்ன
இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகும் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூபாய் 549 மட்டுமே. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் 56 நாட்கள் செல்லுபடி என்பது தான். இந்த ரீசார்ஜை ஒருமுறை ஆக்டிவேட் செய்த பிறகு, 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை, ரீசார்ஜ் செய்யும் தேதியை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க | மிக மலிவான 5ஜி போனை அறிமுகம் செய்ய தயாராகும் OnePlus

ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர Airtel Xstream App அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

மேலும் படிக்க | CHATGPT: அடுத்த வாரம் அறிமுகமாகும் GPT-4..! வீடியோ துறை ஆட்டம் காணப்போகிறது...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News