ஜியோ பிளஸ் சந்தா இலவசம்! புதிய திட்டத்தில் ஆஃபர்களை அள்ளி வீசிய ஜியோ..!

ஜியோ நிறுவனம் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தில் ஜியோ பிளஸ் இலவச சந்தாவை அறிவித்திருப்பதுடன் இன்னும் சில அம்சங்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து குஷிப்படுத்தியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 07:47 PM IST
ஜியோ பிளஸ் சந்தா இலவசம்! புதிய திட்டத்தில் ஆஃபர்களை அள்ளி வீசிய ஜியோ..! title=

ஜியோ நிறுவனம் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை கைவசம் வைத்திருக்கிறது. இப்போது புதிய பேம்லி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. 399 ரூபாய் செலுத்தினால் முதல் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். பேம்லி திட்டத்தில் ஜியோ இணைப்பை பெற்றவர்களுக்கு ஒரு மாத ஜியோ பிளஸ் சந்தா இலவசம். கூடுதலாக இதில் 3 இணைப்புகளையும் சேர்த்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு கூடுதல் இணைப்புக்கும் 99 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 

மேலும் படிக்க | எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கு: சாட்ஜிபிடி இணை நிறுவனர் ஒப்புதல்

மொத்தமாக பார்த்தால் 696 ரூபாய் செலுத்தி அதிகப்டசமாக நான்கு இணைப்புகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 75 ஜிபி டேட்டா இருக்கும். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் என்னவென்றால் ஒரு சிம்மில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 174 ரூபாய் செலவழிக்க வேண்டும். நீங்கள் அதிக டேட்டாவைச் செலவழிப்பதாக உணர்ந்தால், 100 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தைத் தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த, வாடிக்கையாளர்கள் முதல் இணைப்பில் ரூ.699 செலுத்த வேண்டும். மீதமுள்ள அனைத்து கூடுதல் இணைப்புகளுக்கு, ஒரு இணைப்புக்கு ரூ.99 செலுத்த வேண்டும். 

ஏற்கனவே கூறியதுபோல் இந்த பேம்லி திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 3 இணைப்புகளை மட்டுமே எடுக்க முடியும். இது மட்டுமின்றி, நிறுவனம் சில தனிப்பட்ட திட்டங்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரூ.299-க்கான 30 ஜிபி டேட்டா திட்டமும், ரூ.599-க்கான வரம்பற்ற டேட்டா திட்டமும் அடங்கும். ஜியோ ட்ரூ 5ஜி வெல்கம் ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அதை உங்கள் முழு குடும்பமும் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணையும் தேர்வு செய்யலாம். 

இதில், வாடிக்கையாளர்களுக்கு சிங்கிள் பில்லிங், டேட்டா ஷேரிங் மற்றும் நெட்ஃபிக்ஸ், அமேசான், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற பிரீமியம் உள்ளடக்க பயன்பாடுகளும் வழங்கப்படுகின்றன. ஜியோ ஃபைபர் பயனர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், பிற ஆபரேட்டர்களின் தற்போதைய போஸ்ட்பெய்டு பயனர்கள் மற்றும் ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த பாதுகாப்பு டெபாசிட்டும் செலுத்த வேண்டியதில்லை. ஒரு மாத சோதனைக்குப் பிறகு ஒரு பயனர் சேவையைப் பிடிக்கவில்லை என்றால், அவர் தனது இணைப்பை ரத்து செய்யலாம்.

மேலும் படிக்க | ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News