இந்த தசாப்தத்தில் பறக்கும் காரில் பயணம், செவ்வாய் கிரகத்தில் விடுமுறை கொண்டாட்டம் மற்றும் ஸ்மார்ட் வீடுகள் என வாழ்க்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் காத்திருக்கும் வேளையில், உங்களுக்காக சந்தையில் ஒரு புதிய சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அது தான் ஏர்டெல் வைபை அழைப்பு (Airtel Wi-Fi Calling). கடந்த வருடம் 2019 டிசம்பர் மாதம் முதல் ஏர்டெல் தனது வைபை காலிங் சேவையை அறிமுகப்படுத்தியது. இப்படி ஒரு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான தீர்வை வழங்கிய முதல் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் ஏர்டெல் என்பது சிறப்பு.


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஏர்டெல் வைபை காலிங் என்றால் என்ன?


ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு கால் டிராப் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த காலிங் அனுபவத்தை வழங்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது உட்புற செல்போன் கவரேஜைக் அதிகரிக்கும் தன்மையை கொண்டது. ஏர்டெல் வைபை மூலம் இணையத்தைப் பயன்படுத்தி காலிங் செய்ய முடியும். அதாவது செல்போன் டவர்களுக்கு பதிலாக இணையம் வாயிலாகக் கால் செய்ய முடியும். இதன்மூலம் கால் டிராப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.


  • ஏர்டெல் வைபை காலிங் எவ்வாறு உங்களுக்கு பயனளிக்கும்?


உங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே அடிக்கடி ஏற்படும் கால் டிராப் மற்றும் சரியான நெட்வொர்க் இல்லாதது தான். அந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உங்கள் அழைப்புகளின் தரத்தை வியத்தகு முறையில் மேம்படுத்தும். அதுமட்டுமில்லாமல் வைபை நெட்வொர்க் மூலம் எச்டி குரல் அழைப்புகளைச் செய்யவும், தெளிவாக பேசவும் உங்களால் முடியும். மேலும் இது மிகவும் பாதுகாப்பானதாக இருப்பதால், உங்களுக்கு வரும் ஆபாசம் மற்றும் தவறான அழைப்புகளை குறித்து உடனடியாக கண்டு பிடிக்க முடியும்.


இந்த சேவையைத் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன நிலையில், நாடு முழுவதும் 3 மில்லியன் மக்கள் ஏர்டெல் வைஃபை அழைப்பைப் பயன்படுத்துகின்றனர். ஏர்டெல் அறிமுகப்படுத்திய இந்த புதிய சேவை மிகவும் வசதியானது, நம்பகமானது மற்றும் பயனுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றே போதும். இந்த ஆண்டுக்கும் 10 மில்லியன் வாடிக்கையாளர்களாக அதிகரிக்க அதிகரிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.



  • எங்கெல்லாம் ஏர்டெல் வைபை காலிங் சேவை இருக்கிறது:


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாடு முழுவதும் ஏர்டெல் வைபை அழைப்பு சேவை துவங்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பிராட்பேண்டுகளிலும் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, 16 பிராண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் வைபை காலிங் சேவை கிடைக்கும்படி உருவாக்கிப்பட்டு உள்ளது. இந்த வைபை காலிங் சேவை கிடைக்கும் போன்கள் குறித்து முழுபட்டியல் பார்க்க கிளிக் (Click) செய்யவும்.


பிராண்ட்

எண்ணிக்கை

மாடல்

சியோமி

12

ரெட்மி K20/K20 Pro, POCO F1/X2, ரெட்மி7A/7/Note 7 ப்ரோ/நோட் 8/ Y3/8/8A/8A டுயல்

சாம்சங்

20

J6, A10s, On6, M30s, S10/S10 Lite, S9/S9+, S10+, S10e,M20, Note 10/Note 10 Lite, Note 9, Note 10+, M30, A30s, A50S, A51, M30

ஒன்பிளஸ்

6

ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7T, ஒன்பிளஸ் 7Pro, ஒன்பிளஸ் 7T Pro, ஒன்பிளஸ் 6, ஒன்பிளஸ் 6T

ரியல்மி

8

X2 Pro, ரியல்மி 1, ரியல்மி 5, ரியல்மி 5s, ரியல்மி 5i, ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி x, ரியல்மி U1

ஓப்போ

2

ஓப்போ F15, ஓப்போ ரெனோ 3 ப்ரோ

நோக்கியா

7

6.1/6.1 ப்ளஸ்/7 ப்ளஸ்/7.1 DS/8.1 DS/8 சிர்கோ/ 9 ப்யூர்விவூ

ஆப்பிள்

28

ஐபோன் 6s துவங்கி அதற்கு மேல் உள்ள அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.

விவோ

2

ஐகூ 3 (4G), IQoo 3 ( 5G)

டெக்னோ

10

பேட்டோம் 9, ஸ்பார்க் கோ ப்ளஸ் /கோ /பவர் /ஆர் /4 (KC2)/4-KC2J, காமென் ஏஸ் 2/ஏஸ்2X/12 ஆர்

ஸ்பைஸ்

1

ஸ்பைஸ் F311

ஐடெல்

1

A46

இன்பினிக்ஸ்

9

Hot 8, S5 லைட் , S5, நோட் 4, ஸ்மார்ட் 2, நோட் 5, S4, ஸ்மார்ட் 3, ஹாட் 7

மொபிஸ்டார்

6

C1, C1 லைட், C1 சைன், C2, E1 செல்பி, X1 நோட்ச்

கூல்பேட்

4

கூல் 3, கூல் 5, நோட் 5, மெகா 5C

ஜியோனி

1

F205 ப்ரோ

மைக்ரோமேக்ஸ்

3

இன்பினிட்டி N12, N8216, B5

சோலோ

1

சோலோ ZX

பானசோனிக்

4

P100, எலாகுரே 700, P95, P85 NXT

லைஃப்

1

லைஃக் வின்ட் 4S LS 5018

இன்டெக்ஸ்

1

இன்டி  11

யூஹோ

2

ஓய்1 ஏஸ், ஓய் 3 ப்ரோ

எசென்டியல்

1

A11

லாவா

1

Z92

வோடோ

1

V9

டம்போ

1

TA-40


  • ஏர்டெல் வைஃபை அழைப்பை எவ்வாறு பெறுவது?


நல்ல செய்தி என்னவென்றால், ஏர்டெல் வைபை அழைப்பைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லை. இதற்கு நீங்கள் பதிவு செய்யவும் தேவையில்லை. எஇதற்கு குறிப்பாக எந்தவொரு திட்டமும் இல்லை. மேலும் உங்கள் சிம் கார்டை மேம்படுத்தவும் தேவையில்லை. ஆம், உங்களிடம் ஸ்மார்ட்போன், ஏர்டெல் சிம் மற்றும் வைபை இணைப்பு இருந்தால் போது... ஏர்டெல் வைபை காலிங் சேவையை பெறலாம். நீங்கள் செய்யவேண்டிய செயல்முறை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.


படி 1: உங்கள் செல்போன் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை (OS) லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யவும்


படி 2: உங்கள் தொலைபேசியில் VoLTE-ல் இருந்து WiFi காலிங் சேவை முறைக்கு மாறவும்.


படி 3: இப்பொழுது உங்கள் தொலைபேசி செட்டிங்கில் சென்று வைபை காலினை இயக்கவும்.



இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அழைக்கும் நபர் எந்த வைபை நெட்வொர்க்கில் இணைந்திருந்தாலும் இதை பயன்படுத்த முடியும். வைபை காலிங் இணைப்பு இருக்கும் வரை நீங்கள் அழைப்புக்களை தொடரலாம்.