ஏர்டெல் விமான பயணிகளுக்கு 3 `கிக்` திட்டங்கள்: 24 மணி நேரமும் இனி ஜாலி
விமான பயணத்திலும் தடையின்றி டேட்டா மற்றும் அழைப்புகளை பேசும் வகையில் ஏர்டெல் நிறுவனம் 3 சூப்பரான இன் பிளைட் பிளான்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக மூன்று இன்-ஃப்ளைட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இனி பிளைட்டில் செல்லும்போது கூட தங்குதடையில்லாமல் அழைப்புகள் மற்றும் ஏர்டெல் டேட்டாவை யூஸ் பண்ணலாம். ப்ரீப்பெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரு பார்மேட்டுகளிலும் இந்த மூன்று திட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏர்டெல் ரூ 195 பிளான்
ஏர்டெல் நிறுவனம் இன்-ஃப்ளைட் திட்டத்தில் 195 ரூபாய் பிளானில், 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்ஸ் (Outgoing Calls) மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் (Outgoing SMS) போன்ற நன்மைகளை 24 மணி நேரம் வேலிடிட்டியில் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.295 பிளான்
இந்த இன்பிளைட் பிளானில் அதே அவுட்கோயிங் கால்ஸ் மற்றும் அவுட்கோயிங் எஸ்எம்எஸ் நன்மைகளை 24 மணிநேரம் வேலிடிட்டியில் கொடுக்கும் ஏர்டெல், கூடுதலாக 250 எம்பி டேட்டாவை கொடுக்கிறது. அதாவது மொத்தம் 500 எம்பி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.595 பிளான்
இதேபோல் 595 ரூபாய் பிளானிலும் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிளான்களில் இருக்கும் அம்சமே கிடைக்கும் என்றாலும் யூசர்கள் டேட்டாவை மட்டும் கூடுதலாக உபயோகித்துக் கொள்ளலாம். அதாவது 1ஜிபி டேட்டாவுடன் 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை 24 மணி நேர வேலிடிட்டியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனத்தில் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீப்பெய்ட் என எந்த சிம் கார்டு வாடிக்கையாளர்களாக இருந்தாலும் இந்த பிளைட் இன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | உங்க ஸ்கூட்டர் மைலேஜ் ராக்கெட் வேகத்துல பறக்க இந்த 6 டிப்ஸ் போதும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ