நமது ஸ்மார்ட்போனில் பல தேவைகளுக்காக நாம் பயன்படுத்தக்கூடிய செயலிகள் அனைத்துமே நமக்கு நன்மைபயக்காது, அதில் சில செயலிகள் நமக்கு மிகவும் ஆபத்தானவையாக இருக்கக்கூடும்.  இப்போது ஆபத்தான தீம்பொருளால் 11 ஆண்ட்ராய்டு செயலிகள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் அவர்களின் சாதனத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் தங்கள் சாதனமும் ஏதேனும் மோசமான தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை இப்போதே சரிபார்த்து கொள்ள வேண்டும்.  அந்த ஆபத்து விளைவிக்கும் மென்பொருளின் பெயர் 'Fleckpe' ஆகும், இது 600000 பயனர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்ட பல கூகுள் செயலிகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த செயலிகளை பயன்படுத்துவதால் நிதியிழப்பு பிரச்சனையை சந்திக்கும் அபாயம் உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Second Hand வாகனம் வாங்கும் போது இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்


சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Kaspersky தான் இந்த தீங்கிழைக்கக்கூடிய Fleckpe மென்பொருளை கண்டுபிடித்து இருக்கிறது.  இந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மென்பொருள் கடந்த ஆண்டிலிருந்தே செயலில் இருந்து வருவது அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாகும்.  இந்த ஆபத்தான மென்பொருளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தாலும், இந்த மால்வேர் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ள அந்த ஆபத்தான செயலிகளின் பட்டியலை பின்வருமாறு காண்போம்.


1) Impressionism Pro Camera


2) GIF Camera Editor Pro


3) HD 4K Wallpaper


4) Fingertip Graffiti


5) Microclip Video Editor


6) Beauty Camera Plus


7) Beauty Photo Camera


8) Beauty Slimming Photo Editor


9) Photo Camera Editor


10) Photo Effect Editor


11) Night Mode Camera Pro


12) FIGHTING ANDROID MALW


Fleckpe மால்வேர்-பாதிக்கப்பட்ட மேற்கண்ட செயலிகள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தால் அதனை நீங்கள் உடனடியாக மொபைலிலிருந்து நீக்கிவிடுங்கள்.  அன்-இன்ஸ்டால் ஆப்ஷனை பெற வேண்டுமானால், உங்கள் மெனுவில் உள்ள ஆப்ஸ் ஐகானை நேரடியாக அழுத்தலாம்.  அதுமட்டுமின்றி, உங்கள் கூகுள் பிளே ஸ்டோரைத் திறந்து, மெனு பக்கத்திற்கு சென்று, அதில் மை ஆப்ஸ் & கேம்ஸ் என்கிற ஆப்ஷன் இருக்கும்.  அந்த பக்கத்திற்குள் சென்று எந்த செயலியை நீக்க விரும்புகிறீர்களோ அந்த செயலியை தேர்வு செய்து நீங்கள் நீக்கி கொள்ளலாம்.  உங்கள் ஸ்மார்ட்போனில் எப்போது நீங்கள் செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போதும், அதனை கவனமாக இன்ஸ்டால் செய்வது முக்கியமானது. நீங்கள் டவுன்லோடு செய்யக்கூடிய செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தால் அதனை டவுன்லோடு செய்வது பாதுகாப்பானது என்று அர்த்தம் இல்லை, டவுன்லோடு செய்வதற்கு முன் நீங்கள் அதை சரிபார்க்க வேண்டும்.  கூடுமானவரை கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற நன்கு அறியப்பட்ட மூலங்களிலிருந்து மட்டுமே செயலிகளை டவுன்லோடு செய்யுங்கள்.  செயலிகளை டவுன்லோடு செய்யும்போது உங்கள் இருப்பிடம் மற்றும் தொடர்புகள் போன்ற முக்கியமான தகவலுக்கான அணுகலை வழங்குவதைத் தவிர்க்கவும்.  உங்கள் சாதனத்தில் நம்பகமான வைரஸ் தடுப்பு செயலியை நிறுவுவது தீம்பொருளிலிருந்து பாதுகாப்பதற்கு உதவும்.


மேலும் படிக்க | வெறும் ரூ.15,000க்குள் கிடைக்கக்கூடிய அசத்தலான ஸ்மார்ட்போன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ