புது டில்லி: புதிய iOS 14 புதுப்பிப்பு ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சம் பயனர்களின் தனிப்பட்ட தரவை கண்காணிக்கும் மற்ற பயன்பாடுகளைக் கண்டறிய முடியும். முந்தைய பதிப்பில் உள்ள சில குறைபாடு காரணமாக, உங்கள் தொலைபேசியில் நுழைந்து உங்கள் தரவுகளை எடுக்க முடியும். இப்போது ஒரு பயன்பாடு (APPs) அவ்வாறு செய்தவுடன் பயனருக்கு எச்சரிக்கை கிடைக்கும். இந்த அம்சத்தின் உதவியுடன், சீன பயன்பாடான டிக்டோக் (TikTok) நீண்ட காலமாக மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்களை உளவு பார்த்தது தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதுகாப்பு ஆய்வாளர்கள் தலால் ஹஜ் பக்ரி மற்றும் டாமி மிஸ்க் ஆகியோர் பயனர்களின் உளவு பயன்பாடுகளில் Tiktok நிறுவனமும் ஒன்றாகும் என்று சுட்டிக்காட்டினர். ஆனால் இனி அப்படி நடக்காது. இருப்பினும், iOS 14 இன் புதிய டிவைஸ் மூலம் Tiktok மீண்டும் உங்கள் தரவு குறித்து உளவு பார்த்தால் எச்சரிக்கை அம்சம் வேலை செய்யும். 


READ | TikTok செயலிக்கு பதிலாக நாம் இனி எந்தெந்த செயலியை பயன்படுத்தலாம்


READ | TikTok, UC browser, ShareIT உட்பட 52 சீன Apps-ஐ பயன்படுத்த வேண்டாம்


ஏற்கனவே டிக்டாக் நிறுவனத்திற்கு இதுக்குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது.  ஏப்ரல் மாதத்திற்குள் சரிசெய்யப்படும் என என தெரிவித்தது. ஆனால் இன்னும் சரிசெய்யபப்டவில்லை. இதற்கு Tiktok நிறுவனம், "நாங்கள் ஏற்கனவே ஆப் ஸ்டோரில் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை சமர்ப்பித்துள்ளோம், மேலும் ஸ்பேம் எதிர்ப்பு அம்சம் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் மேலும் குழப்பம் ஏற்படாது என டிக்டாக் கூறியுள்ளது. 


பயனர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் குறிப்புகளை அணுகும் போது டிக்டாக் முன்பு பிடிபட்டது, பின்னர் நிறுவனம் அதை ஒரு குறைபாடாக சரிசெய்வது பற்றி பேசியது. இருப்பினும், புதிய iOS 14 அம்சத்தின் உதவியுடன், நிறுவனத்தின் இந்த பொய் முன்னுக்கு வந்தது. இது தெரியவந்த பின்னரும் Tiktok பயன்பாட்டில் இருந்து எந்த முன்னேற்றமும் மாற்றமும் செய்யப்படவில்லை. 


நீங்கள் Tiktok செயலியை பயன்படுத்தப்படும் போது உங்கள் கடவுச்சொல் மற்றும் அஞ்சல் முகவரி அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்.