ஆன்லைனில் பணம் செலுத்தும்போது QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது கவனமாக இருக்கவும்... இல்லாவிட்டால் ஏமாற்றப்படலாம். இன்றைய ஆன்லைன் உலகில் மிகச்சிறிய பேமெண்டைக் கூட ஆன்லைனில் செலுத்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், அதிலும் சிக்கல்கள் அதிகமாகத்தான் இருக்கிறது. எனவே கவனமாக செயல்படுங்கள் என்று உணர்த்தும் உண்மைச் சம்பவம் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்... OLX (Online Payment) பண செலுத்தும் முறையில் மோசடிகள் தொடர்பான பல செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இதுதொடர்பாக அந்த நிறுவனம் பல நடவடிக்கைகளையும், தொழில்நுட்ப மேம்படுத்துதலையும் செய்து வருகிறது.


ஆன்லைன் மோசடி தொடர்பான அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதேபோல், UPI ஆப்ஸில், பயனர்கள் QR குறியீடு ஸ்கேன் செய்யும்போது, ​​UPI பின்னை உள்ளிட்ட பிறகுதான் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 


ALSO READ | இந்தியன் வங்கியில் 266 கோடி ரூபாய் மோசடி - RBI


இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில் UPI மூலம் பணம் செலுத்துவது சுலபமாக இருக்கிறது. அதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், மோசடி செய்பவர்கள் புதிய வழியையும் கண்டுபிடித்து விடுகின்றனர். கியூஆர் குறியீட்டின் உதவியுடன், 50,000 ரூபாயை மோசடி செய்த சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


சைபர் குற்றவாளிகள் OLX மற்றும் பிற வகைப்படுத்தப்பட்ட தளங்களின் உதவியுடன் ஆன்லைன் மோசடி செய்கிறார்கள். QR குறியீடு ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போது, மோசடி செய்து, வேறு ஒரு கணக்கிற்குக் பணம் சென்றது.  


பொதுவாக ஒரு பொருளை வாங்கும்போது, UPI செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பின்னை உள்ளிடும்போது, ​​பொருளுக்கான கட்டணம் செலுத்தப்படும். உண்மையில், மோசடி செய்பவர்கள் (Money Fraud) நீங்கள் அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பின் எண்ணை உள்ளிட்டவுடன், உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு, மோசடி செய்பவர்களின் கணக்கைச் சென்றடையும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கின்றனர்.


இதுமட்டுமின்றி, QR குறியீட்டின் கீழே உள்ள உரையைத் திருத்துவதன் மூலமும் மோசடி செய்பவர்கள் நாம் செலுத்தும் தொகையை மாற்றலாம் என்று கூறப்படுகிறது.


READ ALSO | Android பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த செயலிகள் உங்களை மோசடியில் சிக்க வைக்கலாம்


சமீபத்தில் ஒரு பயனர் 10,000 ரூபாய் பரிவர்த்தனைக்காக, QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI பின்னை (UPI Pin) உள்ளிட்டார். அதன் பிறகு அவரது கணக்கில் இருந்து 50,000 ரூபாய் சென்றுவிட்டது. மோசடியாளர்கள் இந்த வகையான QR குறியீட்டை பொது இடத்தில் மற்ற குறியீடுகளுக்கு மேல் வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக உங்கள் பணம் கடைக்காரருக்கு செல்வதற்கு பதிலாக மோசடியாளர்களுக்கு சென்றுவிட்டது.


QR குறியீடு  மோசடியை எவ்வாறு தவிர்ப்பது?


உங்களுக்கு பணம் வருவதாக இருந்தால், அதற்கு  QR குறியீட்டை ஸ்கேன் செய்யவோ அல்லது UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.


QR குறியீட்டின் மூலம் நீங்கள் யாருக்காவது பணம் செலுத்துகிறீர்கள் என்றால், UPI பின்னை உள்ளிடுவதற்கு முன், பணம் பெறுபவரின் பெயரைச் சரிபார்க்கவும்.


யாரேனும் தெரியாத நபர் கொடுத்த QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்.


OLX அல்லது வேறு எந்த தளத்திலும் உங்களைத் தொடர்புகொள்பவரை நம்ப வேண்டாம். தொடர்பு கொள்பவரின் விவரங்களை சரிபார்க்கவும்.


ALSO READ | ரூ. 15000-ல் OPPO வின் புதிய ஸ்மார்ட் போன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR