ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகின்றன என்றுதான் கூறவேண்டும்.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் A 55 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த A 54 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இதில் 6.51 இன்ச் ஹெச்.டி. பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 6 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒ.எஸ்.11 கொண்டிருக்கும் ஒப்போ A55 ஸ்மார்ட்போன் 50 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த், 2 MB மேக்ரோ கேமரா, 16 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஒப்போ A55 ஸ்மார்ட்போன் 5000 M.A .H பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
ஒப்போ A55 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 GB + 64 GB விலை ரூ. 15,490 என்றும் 6 GB + 128 GB விலை ரூ. 17,490 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்று அமேசான் தளத்தில் தொடங்குகிறது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் பல ஒப்போ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.
ALSO READ Amazon Great Indian Festival Sale 2021: iPhone 12 Pro இல் பிரம்மாண்ட தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR