Amazon Deal Of The Day: அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தற்போது நடந்து வருகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன. மிகவும் விலையுயர்ந்த தொலைபேசிகளையும் இங்கே மலிவான விலையில் வாங்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் (Amazon) ஒவ்வொரு நாளும் வெவ்வேறு டீல்களைக் கொண்டுவருகிறது. இதற்கு டீல் ஆஃப் தி டே (Amazon Deal Of The Day) என்று பெயரிடப்பட்டுள்ளது. பல பொருட்கள் இந்த டீலில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.


இன்று ஓப்போ போனை மிகவும் மலிவான விலையில் வாங்க ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு வந்துள்ளது. OPPO A31 போனை அமேசானில் சுமார் 700 ரூபாய்க்கு வாங்கலாம். 700 ரூபாய்க்கு எப்படி ஓப்போ போனை வாங்குவது என இங்கே தெரிந்துகொள்ளலாம்.


OPPO A31: சலுகைகள் மற்றும் தள்ளுபடி


OPPO A31 இன் விலை ரூ .15,999 ஆகும். எனினும், அமேசான் இந்த போனில் 28% தள்ளுபடி அளிக்கிறது. அதாவது, போனின் விலை ரூ .11,490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!!


ஆனால் இந்த போனை இதைவிட மலிவாக வாங்க முடியும். பரிமாற்ற சலுகையை பயன்படுத்தி ரூ. 700 க்கு இந்த போனை வாங்கலாம். இந்த போனை வாங்கும்போது 10,750 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது.


உங்கள் பழைய தொலைபேசியை நீங்கள் பரிமாற்றிக்கொண்டால், நீங்கள் அதிக அளவிலான சலுகைகளைப் பெறலாம். ஆனால் இது பழைய போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது. உங்கள் தொலைபேசியின் நிலை நன்றாகவும் சமீபத்தியதாகவும் இருந்தால், உங்களுக்கு இந்த தொகை பரிமாற்ற சலுகையாக கிடைக்கும். இந்த அனைத்து சலுகைகளும் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் OPPO A31 ஐ சுமார் 700 ரூபாய்க்கு வாங்கலாம்.


OPPO A31: விவரக்குறிப்புகள்


இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) 6.5 இன்ச் வாட்டர் டிராப் மல்டி-டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதில் 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் உள்ளது. இந்த சாதனம் மீடியா டெக் 6765 ஆக்டா-கோர் செயலி மூலம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.


இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா உள்ளது. இதில் 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா அகியவை உள்ளன.


இதில் AI பியூட்டிஃபிகேஷன் தொழில்நுட்பத்துடன் 8 மெகாபிக்சல் முன் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த 4 ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இரட்டை நானோ சிம் வசதியை ஆதரிக்கிறது. இது ColorOS 6.1 இயக்க முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு v9.0 உடன் வருகிறது மற்றும் 4,230 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


ALSO READ: Amazon Great Indian Festival:ரூ.8000-ஐ விட குறைவான விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR