Amazon Great Indian Festival:ரூ.8000-ஐ விட குறைவான விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன்

டெக்னோ ஒரு பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். இது பட்ஜெட் பிரிவில் தொலைபேசிகளை தயாரிப்பதில் பிரபலமாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2021, 09:08 AM IST
  • இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது.
  • அமேசான் சேலில், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.
  • ஸ்பார்க் 7T இந்தியாவில் ரூ. 8,999 க்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Amazon Great Indian Festival:ரூ.8000-ஐ விட குறைவான விலையில் அசத்தும் ஸ்மார்ட்போன் title=

Amazon Great Indian Festival: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. தற்போது நாடு முழுவதும் பேசுப்பொருளாக இருக்கும் அமேசான் சேலில், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் சிறந்த சலுகைகள் கிடைக்கின்றன.

நீங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பை வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசான் பல வகைகளிலும் பல சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனத்தை பரிமாற்றிக்கொண்டு புதிய தொலைபேசியை மலிவாகப் பெறலாம். இது தவிர, இதில் கேஷ்பேக் மற்றும் வங்கி சலுகைகளும் கிடைக்கின்றன.

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு அசத்தலான பல டீல்கள் உள்ளன. இந்த சேலில், பிரபலமான பிராண்டான டெக்னோ ஸ்பார்க் 7T-ல் (Tecno Spark 7T) பெரும் தள்ளுபடி உள்ளது. டெக்னோ ஸ்பார்க் 7T இல் உள்ள சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Amazon Great Indian Festival: Tecno Spark 7T இல் சலுகைகள்

டெக்னோ ஒரு பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். இது பட்ஜெட் பிரிவில் தொலைபேசிகளை தயாரிப்பதில் பிரபலமாக உள்ளது. ஸ்பார்க் 7T இந்தியாவில் ரூ. 8,999 க்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், அமேசான் (Amazon) இப்போது ஸ்பார்க் 7T இல் ரூ .500 தள்ளுபடி வழங்குகிறது. ஆகையால் விலை ரூ .8999 இலிருந்து ரூ .8,499 ஆகக் குறைந்துள்ளது.

ALSO READ: Cheapest Smartphones: ரூ. 10,000-க்கும் கீழ் கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் 

இது மட்டுமல்லாமல், இந்த போனை இன்னும் மிக மலிவான விலையிலும் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அதாவது, போனின் விலை இன்னும் 849 ரூபாய் குறையும். அதாவது, வாடிக்கையாளர்கள் 7649 ரூபாய்க்கு போனை வாங்க முடியும்.

Tecno Spark 7T இன் விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 6.52HD + IPS டிஸ்ப்ளே மற்றும் 90.3% ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ கொண்டுள்ளது. ஸ்பார்க் 7T ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஹீலியோ ஜி 35 கேமிங் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதை மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது.

Tecno Spark 7T இன் கேமரா

ஸ்பார்க் 7T பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிக்காக இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. ஸ்பார்க் 7T -இல் ஒரு சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி உள்ளது. இது ஸ்டாண்ட்பை மோடில் 36 நாட்கள் பேட்டரி ஆயுளை அளிக்கிறது.

ALSO READ: Amazon Great Indian Festival Sale 2021: iPhone 12 Pro இல் பிரம்மாண்ட தள்ளுபடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News