அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: ரூ. 23,000 விவோ போன் வெறும் ரூ.2,899க்கு கிடைக்கும்
Vivo Y53s 5G Amazon Offer: அசல் விலையான 23 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விவோவின் அசத்தலான ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அமேசானில் விவோ ஒய்53எஸ் 5ஜி சலுகை: விவோ மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆகும். வாடிக்கையாளர்களிடையே விவோ தொலைபேசிகளுக்கு அதிக அளவிலான தேவை உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்துடன் இருப்பவர்கள், விவோவின் விவோ ஒய்53எஸ் ஸ்மார்ட்போனை மிகப்பெரிய தள்ளுபடியில் வாங்கலாம். இதன் அசல் விலையான 23 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
விவோ ஒய்53எஸ் போனில் மகத்தான தள்ளுபடி
22,990 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்53எஸ் போன், இந்திய ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் 27% தள்ளுபடிக்குப் பிறகு 16,699 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பேங்க் ஆஃப் பரோடாவின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால், 1,500 ரூபாய் வரை பெரும் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.15,199 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை; பாதி விலையில் புதிய டிவியை வாங்கலாம்
எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
விவோ ஒய்53எஸ்-ன் இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.12,300 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால், இந்த விவோ ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் ரூ.15,199க்கு பதிலாக வெறும் ரூ.2,899க்கு வாங்கலாம். இதன்மூலம் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள விவோ ஒய்53எஸ் போனை அமேசானில் வெறும் ரூ.2,899க்கு பெறலாம்.
விவோ ஒய்53எஸ்-இன் அம்சங்கள்
விவோ ஒய்53எஸ் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதில் நீங்கள் 6.58-இன்ச் எஃப்எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 2408 x 1080 பிக்சல்கள் தீர்மானம் பெறுவீர்கள். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய சென்சார் 64எம்பி கொண்டது. இதில் மற்ற இரண்டு 2 எம்பி சென்சார்கள் உள்ளன.
விவோ ஒய்53எஸ் ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஹீலியோ ஜி80 ஆக்டா கோர் செயலியில் இயங்குகிறது.
மேலும் படிக்க | Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR