Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி

Oppo F21 Pro 5G Amazon Offer: ஓப்போவின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சலுகைகளில் ஒன்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 14, 2022, 01:03 PM IST
  • ஓப்போ ஃபெண்டாஸ்டிக் டேஸ் அமேசான் சேல் ஆஃபர்.
  • ஓப்போ போன்களுக்கு மகத்தான தள்ளுபடி.
  • சேலின் விவரங்களை இங்கே காணலாம்.
Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி title=

ஓப்போ ஃபெண்டாஸ்டிக் டேஸ் அமேசான் சேல் ஆஃபர்: உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? உங்கள் பதில் ஆம் எனில், உங்களுக்காக ஒரு சிறந்த சலுகையைப் பற்றிய தகவல் இந்த பதிவில் உள்ளது. இதைப் பற்றி தெரிந்தால் நீங்களும் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். 

உங்களுக்கு பிடித்த ஆன்லைன் தளமான அமேசானில் ஓப்போ ஃபெண்டாஸ்டிக் டேஸ் சேல் நடைபெறுகிறது. இதில் ஓப்போவின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள சலுகைகளில் ஒன்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஓப்போ எஃப்21 ப்ரோ 5ஜி இல் உடனடி தள்ளுபடியைப் பெறுங்கள்
ஓப்போ எஃப்21 ப்ரோ 5ஜி இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஓப்போவின் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் ரூ.31,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த 5ஜி போன் அமேசான் விற்பனையில் 16% தள்ளுபடியுடன் ரூ.26,999க்கு விற்கப்படுகிறது. 

பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டை கொண்டு இந்த போன் வாங்க பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1,500 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், நீங்கள் இந்த போனை ரூ.25,499 க்கு வாங்க முடியும்.

மேலும் படிக்க | பட்ஜெட் விலையில் அடுத்து அறிமுகமாகும் சாம்சங்கின் புதிய 5G போன் 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் அதிரடி தள்ளுபடி

ஓப்போ ஃபெண்டாஸ்டிக் டேஸ் விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள ஓப்போ எஃப்21 ப்ரோ 5ஜி-யின் இந்த டீலில் ஒரு பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இதை வாங்கினால், ரூ.10,650 வரை சேமிக்கலாம். 

எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஓப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,849 ஆக குறையும். இதன் மூலம், 31,999 ரூபாய் மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போனை அமேசானில் இருந்து பாதி விலைக்கும் குறைவான விலையில் வாடிகையாளர்களால் வாங்க முடியும். 

ஓப்போ எஃப்21 ப்ரோ 5ஜி அம்சங்கள்
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ எஃப்21 ப்ரோ 5ஜி இல், 6.43-இன்ச் எஃப்எஹ்டி + அமோல்ட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90.8 சதவிகித ஸ்க்ரீன்-டு-பாடி விகிதம் ஆகியவற்றைப் பெறுவீர்கள். 

5ஜி சேவைகள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மிகவும் மெலிதானது மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள் 64எம்பி பிரதான சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2எம்பி மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றைப் பெறலாம். 16எம்பி முன் கேமரா பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் 4500mAh பேட்டரி மற்றும் 33வாட் SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 8ஜிபி ரேம் உடன், இந்த மொபைலில் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். இதை 1டிபி வரை விரிவாக்கலாம்.

ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கான இந்த சிறப்பு விற்பனை மே 16 வரை அமேசானில் நேரலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் 5 மொபைல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News