நீங்கள் புதிய டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால், அமேசானில் நடைபெற்று வரும் விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது அமேசானில் எவ்வித சிறப்பு விற்பனை இல்லை என்றாலும், டெலிவிஷன் ஸ்டோர் மூலமாக 50% தள்ளுபடியுடன் புதிய டிவியை வாங்கலாம்.
இது மட்டுமின்றி, அமேசான் விற்பனையில் கட்டணமில்லா இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகள் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் இதில் பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகளுக்கு 10% கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும். எனவே இந்த விற்பனை மூலம் நீங்கள் என்ன பொருட்கள் வாங்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்
இவைதான் டிரெண்டிங் டீல்களா?
அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் கிடைக்கும் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி பேசுகையில், சோனியின் 55 இன்ச் ஸ்கீர்ன் அளவுள்ள யுஎச்டி கூகுள் டிவியை ரூ.72,990க்கு வாங்கலாம். இதில் 20வாட் சவுண்ட் அவுட்புட் கிடைக்கும். மறுபுறம், ரெட்மியின் 50 இன்ச் ஸ்கீர்ன் அளவு யுஎச்டி ஆண்ட்ராய்டு டிவியை ரூ.32,999க்கு வாங்கலாம்.
அதேபோல் ஒன்பிளஸ் இன் 43 இன்ச் ஸ்கீர்ன் அளவு ஒய்-சீரிஸ் ஸ்மார்ட் டிவி ரூ.24,490க்கு கிடைக்கும். மேலும் ரெட்மியின் 32 இன்ச் ஸ்கீர்ன் அளவுள்ள எச்டி ரெடி ஸ்மார்ட் டிவியை ரூ.15,499க்கு வாங்கலாம்.
மறுபுறம் சாம்சங்கின் 50 இன்ச் ஸ்கீர்ன் அளவுள்ள கிரிஸ்டல் 4கே டிவியை ரூ.48,990க்கு வாங்கலாம். அதேசமயம் அமேசான் பேசிக்கின் 50 இன்ச் டிஸ்ப்ளே அளவுள்ள டிவியை ரூ.33,499க்கு வாங்கலாம். இது உள்ளமைக்கப்பட்ட அலெக்சா மற்றும் டால்பி அட்மோஸை ஆதரிக்கிறது.
32 அங்குல ஸ்கீர்ன் அளவு விருப்பங்களின் சலுகை விவரம்
பட்ஜெட் பிரிவில் சிறிய ஸ்கீர்ன் அளவு தொலைக்காட்சிகள் ஒரு சிறந்த தேர்வாகும். நீங்களும் அத்தகைய டிவியைத் தேடுகிறீர்களானால், நீங்கள் எம்ஐ ஹொரைசன் எடிஷன் டிவியை வாங்கலாம். இதன் விலை ரூ.16,499 ஆகும்.
அதே நேரத்தில் ஏசரின் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவி ரூ.13,999க்கு வருகிறது. ஐஃபால்கான் மற்றும் கோடக் ஆண்ட்ராய்டு டிவியை ரூ.12,999க்கு வாங்கலாம். இந்த வழியில், நீங்கள் மற்ற பிராண்டுகளின் டிவிகளிலும் அற்புதமான சலுகைகளைப் பெற முடியும்.
மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR