ஒவ்வொரு நாளும் ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் பல சலுகைகள் கிடைக்கின்றன. இன்று ‘அமேசான் டீல் ஆஃப் தி டே’ விற்பனையில்  சில ஸ்மார்ட்போன்களில் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அமேசான் மொபைல் விற்பனை சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீங்கள் 5G ஸ்மார்ட்போனை வாங்க விரும்பி, ஆனால், அந்த விற்பனையை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போயிருந்தால், இன்று அதற்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது. சாம்சங்கின் பிரீமியம் 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் டீல் ஆஃப் தி டேயில் பட்டியலிடப்பட்டுள்ளது. Samsung Galaxy S20 FE 5Gயில் 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என பார்க்கலாம். 


Samsung Galaxy S20 FE 5G: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


Samsung Galaxy S20 FE 5G, 8GB RAM, 128GB ஸ்டோரேஜ் மாறுபாட்டின் அறிமுக விலை ரூ.74,999 ஆகும். ஆனால் இந்த போன் அமேசானில் ரூ.39,990க்கு கிடைக்கிறது. அதாவது, போனில் ரூ.35,009 தள்ளுபடி கிடைக்கிறது. அதனுடன் இந்த விற்பனையில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் காரணமாக போனின் விலை கணிசமாக குறையும்.


Samsung Galaxy S20 FE 5G: எக்ஸ்சேஞ்ச் சலுகை


சாம்சங்கின் Samsung Galaxy S20 FE 5G-யில் ரூ.14,950 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியைப் பெறலாம். எனினும், பழைய போனின் நிலை நன்றாகவும், அது லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே 14,950 ரூபாய்க்கான தள்ளுபடி கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் முழுமையான தள்ளுபடியை பெற முடிந்தால், போனின் விலை ரூ.25,040 ஆகக் குறையும். அதாவது 75 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போன் 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும்.


மேலும் படிக்க | போனில் அதிவேக இணைய சேவை கிடைக்காததற்கு ‘இந்த’ தவறு காரணமாக இருக்கலாம்! 


Samsung Galaxy S20 FE 5G: விவரக்குறிப்புகள்


Galaxy S20 FE ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்ப்ளே உள்ளது. இதன் புதுப்பிப்பு வீதம் 120Hz ஆகும். டச் சேம்பிளிங் விகிதம் 240Hz ஆகும். Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 865 சிப்செட்டின் சப்போர்ட் உள்ளது. 


போனில் பவர் பேக்கப் செய்ய 4500எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்போனை ஒரு நாள் முழுக்க உபயோகிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. வயர்லெஸ் பவர்ஷேர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 மற்றும் 25W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றின் உதவியுடன் நீங்கள் ஃபோனின் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.


Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் IP68 சான்றிதழ் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இது தொலைபேசியை தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. மெமரி கார்டு மூலம் போனின் ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம்.


மேலும் படிக்கலாம் | Flipkart Sale: ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இந்த லேப்டாப் வெறும் ரூ.15 ஆயிரத்துக்கு


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR