புதுடெல்லி: சாம்சங் (Samsung) நிறுவனம், தங்களின் அடுத்த Unpacked Event பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் Samsung Galaxy S22 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy S22 உடன், நிறுவனம் Galaxy Tab S8 ஐ அறிமுகப்படுத்தலாம். இதன் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Samsung Galaxy S22 Series அறிமுகம் செய்யப்படுகிறது
கசிந்த செய்திகளின்படி, Samsung Galaxy S22 Series இல் மொத்தம் மூன்று மாடல்கள் இருக்கும்.
ALSO READ | iPhone 13-ல் இதுவரை இல்லாத தள்ளுபடி: அசத்தும் Flipkart Sale
* முதலாவது 6.1 இன்ச் சாம்சங் கேலக்ஸி S22 R0 என்ற குறியீட்டுப் பெயராகும்.
* இரண்டாவது 6.6 இன்ச் சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஜி0 என்ற குறியீட்டுப் பெயராகும்.
* மூன்றாவது மாடல் 6.8 இன்ச் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 அல்ட்ராவாக இருக்கும், இது B0 என்று பெயரிடப்பட்டுள்ளது.
Samsung Galaxy S22 Ultra இன் அம்சங்கள்
6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன், நீங்கள் Samsung Galaxy Note போன்ற வடிவமைப்பு மற்றும் S Pen ஸ்டைலஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில் நீங்கள் Samsung Exynos 2200 மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 1 ஆகிய இரண்டு சிப்செட் விருப்பங்களைப் பெறுவீர்கள். இதில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.
கேமராவைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 108MP வைட் ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்கள் மற்றும் நல்ல ஆப்டிகல் ஜூம் தரத்துடன் வரும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும்.
Samsung Galaxy S22 இன் அம்சங்கள்
இந்தத் Series இன் அடிப்படை மாடலாக, நீங்கள் 6.1-இன்ச் FHD+ AMOLED 2x டிஸ்ப்ளே, 3,700mAh பேட்டரி, 8GB ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் ஐப் பெறுவீர்கள். Samsung Exynos 2200 அல்லது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த மொபைலில், 50MP வைட்-ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இது 10MP முன் கேமராவையும் கொண்டிருக்கும்.
தற்போது இந்தத் தொடரின் வெளியீட்டிற்குப் பிறகுதான், இதன் விலை எவ்வளவு என்பது தெரியவரும், அதன் பிறகுதான் இந்த அம்சங்கள் உறுதிப்படுத்தப்படும்.
ALSO READ | 35 ஆயிரம் Vivo 5G போனை வெறும் ரூ.799க்கு வாங்க செம வாய்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR