போனில் அதிவேக இணைய சேவை கிடைக்காததற்கு ‘இந்த’ தவறு காரணமாக இருக்கலாம்!

ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்றால் மிகையில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 17, 2022, 10:49 AM IST
  • ஸ்மார்ட்போனின் இணையவேகத்தை அதிகரிக்க எளிய வழி.
  • தொலைபேசியின் சிம் கார்டை இடம் மாற்ற வேண்டும்.
  • போனில் இன்டர்நெட் வேகம் முழுமையாக கிடைக்கும்
போனில் அதிவேக இணைய சேவை கிடைக்காததற்கு ‘இந்த’ தவறு காரணமாக இருக்கலாம்!  title=

ஸ்மார்ட்போன்களில் நெட்வொர்க் பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்ச்னை. இதனால், போனில் வாட்ஸ்அப்பில் அல்லது மெசஞ்சரில் ஒரு 'ஹாய்' மெசேஜ் கூட சீக்கிரம் அனுப்ப முடியாமல் போகும் நிலை பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதிருப்தியில் தங்கள் டெலிகாம் சேவை வழங்குநரை மாற்றினாலும், சிலருக்கு, குறைவான இணைய வேகத்தின் சிக்கல் தீராமல் வாட்டிக் கொண்டே இருக்கும். 

குறைவான இணைய வேகம் இருந்தால் பொதுவாக வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பிரச்சனையை தீர்க்க முயலுவோம். ஆனாலும், சில சமயங்களில் தீர்வு கிடைக்காமல் போகலாம். ஆனால், உங்கள் ஸ்மார்ட்போனின் இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு எளிய வழி உள்ளது.
 இதற்கு நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை, உங்கள் தொலைபேசியின் சிம் கார்டை இடம் மாற்ற வேண்டும். பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் டூயல் சிம் வசதியுடன் தான் வருகிறது. அதாவது ஸ்மார்ட்போனின் சிம் ட்ரேயில் இரண்டு சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். 

மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்

சிம் ட்ரே ஒன்று மற்றும் சிம் ட்ரே இரண்டு என்ற ஆப்ஷன் அனைத்து ஸ்மார்ட்போனிலும் காணலாம். முதலில், உங்கள் சிம் கார்டுகளில் எது சிம் டிரே ஒன்றில் உள்ளது, எந்த சிம் கார்டு சிம் டிரே 2ல் உள்ளது என்பதைச் சரிபார்க்க வேண்டும். சிம் ட்ரே ஒன்றில் சாதாரண அழைப்புடன் கூடிய சிம் கார்டையும், சிம் ட்ரே இரண்டில் இன்டர்நெட் பயன்படுத்தும் சிம் கார்டையும் போட்டிருந்தால், உங்கள் போனின் இன்டர்நெட் வேகம் குறைவாக இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

எனவே உடனடியாக உங்கள் இன்டர்நெட் சிம் கார்டை சிம் ட்ரேயில் ஒன்றில் மற்றொரு சிம்கார்டை சிம் ட்ரே இரண்டில் வைக்க வேண்டும். சிம் ட்ரே ஒன்றில் இணைய வேகம் மிகவும் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. உங்கள் இன்டர்நெட் சிம் கார்டை ட்ரே ஒன்றில் வைத்தவுடன், இன்டர்நெட் வேகம் அதிகரித்திருப்பதை நிச்சயம் உணர்வீர்கள். அதிவேக இணைய சேவை அனுபவிப்பீர்கள்.

மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News