புது டெல்லி: Xiaomi தனது Mi மிக்ஸ் ஸ்மார்ட்போனின் அடுத்த பதிப்பை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xiaomi நிறுவனர் லீ ஜுன் செவ்வாய்க்கிழமை வெளியீட்டு நிகழ்வின் போது Mi Mix 5 உடன் Mi Pad 5 மற்றும் Mi TV OLED வரிசையை வெளியிட்டார். அதேபோல் சீனாவைத் தவிர மற்ற சந்தைகளில் மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் எப்போது முதல் என்கிற தகவலும், இது உலகளாவிய சந்தைகளில் எம்மாதிரியான விலை நிர்ணயத்தை பெரும் என்கிற விவரங்களையும் சியோமி இன்னும் வெளியிடவில்லை. மார்ச் 2021 இல் வந்த Mi 11 அல்ட்ராவுக்குப் பிறகு இந்த ஆண்டு Xiaomi காண்பித்த இரண்டாவது முதன்மை ஸ்மார்ட்போன் Mi Mix 4 ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது சியோமியின் முதல் அண்டர் டிஸ்பிளே செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். அதாவது இந்த புதிய Mi Mix Phone (Xiaomi) ஆனது ஒரு புதிய கேமரா தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது முன்பக்கம் எதிர்கொள்ளும் செல்பீ சென்சாரை டிஸ்பிளேவின் கீழ் மறைக்கிறது. சியோமி நிறுவனம் இந்த கேமராவை CUP என்று அழைக்கிறது.


ALSO READ | மிகவும் மலிவான விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்
 
Mi Mix 4 விலை
8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.57,400 
8GB + 256GB மாடல் - ரூ.60,800
12GB + 256GB - ரூ.66,600 
12GB + 512GB ஸ்டோரேஜ் - ரூ.72,300 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன், செராமிக் பிளாக், செராமிக் ஒயிட் மற்றும் ஆல் நியூ செராமிக் கிரே வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 16 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும். 


Xiaomi Mi Mix 4 இன் மிக முக்கியமான விஷயம் அதன் முன்புறம் ஆகும், இதில் செல்ஃபி கேமராவுக்கு பஞ்ச் ஹோல் எந்த கட்அவுட்டும் இல்லை. முன் ஷூட்டர் உண்மையில் டிஸ்ப்ளேவுக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. 6.67-இன்ச் Full HD+ (1,080x2,400 பிக்சல்கள்) 10bit TrueColor AMOLED டிஸ்ப்ளே உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20: 9 திரை விகிதம் உள்ளது.


இந்த புதில் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ SoC, 12GB வரை LPDDR5 ரேம் உள்ளது. கேமராவை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கபட்டுள்ளது. 108 மெகாபிக்சல் முதன்மை எச்எம்எக்ஸ் சென்சார் (எஃப்/1.95 லென்ஸ்), 13-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது. 


இதில் அல்ட்ரா-வைட்பேண்ட் (யுடபிள்யுபி) ஆதரவு, இது இடஞ்சார்ந்த நிலைப்படுத்தல் (spatial positioning) திறன்களை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மேலும் 4,500 எம்ஏஎச் பேட்டரி, 120W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 


ALSO READ | Redmi Note 10T 5G அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR