லேப்டாப்களுக்கு அசத்தலான தள்ளுபடி... ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் `நச்` மாடல்கள்!
Amazon Laptop Day Sale 2024: அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப்களுக்கு என தள்ளுபடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேட்பாக்ளை இங்கே காணலாம்.
Amazon Laptop Day Sale 2024: அமேசான் நிறுவனம் அதன் தளத்தில் லேப்டாப்களுக்கான பிரத்யேக தள்ளுபடியை விற்பனையை அதன் தளத்தில் அறிவித்துள்ளது. லேப்டாப்புக்கான இந்த தள்ளுபடி விற்பனை மே 22ஆம் தேதி நேற்று தொடங்கி வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தள்ளுபடி விலையில் நீங்கள் லேப்டாப்பை வாங்கினால் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை ஆப்பரை பெறலாம். பல சிறப்பான மாடல்களை நீங்கள் கம்மியான விலையிலும் வாங்கலாம்.
ஒவ்வொரு லேப்டாப்புக்கும் அதன் நிறுவனத்தை பொறுத்து தள்ளுபடிகள் இருந்தாலும், வங்கி சார்ந்தும் தள்ளுபடி உள்ளது. அமேசான் தளத்தில் நீங்கள் ஹெச்டிஎப்சி வங்கி கார்டு மூலம் தவணை முறையில் இந்த லேப்டாப்களை வாங்கும்பட்சத்தில் 5 ஆயிரத்து 250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஹெச்எஸ்பிசி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் தவணை முறையில் பரிவர்த்தனை செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். அந்த வகையில், இந்த பிரத்யேக தள்ளுபடி விற்பனையில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேப்டாப்களை இங்கு காணலாம்.
HP 15s Laptop
இந்த லேப்டாப் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 250 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இது 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி SSD ஸ்டோரேஜ் உடன் இணைந்த 12வது GEN இன்டெல் கோர் i3 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது இரட்டை ஸ்பீக்கர்களுடன் முன்புறத்தில் HP True Vision HD கேமராவுடன் வருகிறது. இது Windows 11 மூலம் இயக்கப்படுகிறது.இந்த லேப்டாப் 37 ஆயிரத்து 990 ரூபாயில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆப்பரில் வாங்குபவர்களுக்கு 12 ஆயிரத்து 400 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியை பெறலாம்.
Asus Vivobook 14
இந்த லேப்டாப் கருப்பு, நீலம், சில்வர் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.மேலும் இது 60Hz ஸ்கிரீன் Refresh Rate உடன் 14 இன்ச் FHD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Windows 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி SSD சேமிப்பகத்துடன் இணைந்து 12th GEN இன்டெல் கோர் i3 பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது.இது 42Whr பேட்டரியுடன் வருகிறது.இதன்மூலம், ஆறு மணிநேரம் தொடர்ந்து இயங்கும்.இதில் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த லேப்டாப் 34,990 ரூபாயில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.எக்ஸ்சேஞ்ச் ஆப்பரில் வாங்க நினைப்பவர்கள் 12 ஆயிரத்து 400 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
Lenovo IdeaPad Slim 3
இந்த லேப்டாப் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 250 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இது Windows 11 மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் 8ஜிபி RAM மற்றும் 512ஜிபி SSD ஸ்டோரேஜ் உடன் இணைந்து 12th Gen இன்டெல் கோர் i3 பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 42Whr பேட்டரியுடன் வருகிறது. இதன் மூலம் ஒன்பது மணிநேர இயக்க நேரத்தை வழங்குகிறது. இது ரேபிட் சார்ஜ் அம்சத்தையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் இந்த லேப்டாப்பை வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, இரண்டு மணிநேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த லேப்டாப் 33 ஆயிரத்து 990 ரூபாயில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.எக்ஸ்சேஞ்ச் ஆப்பரில் வாங்குபவர்களுக்கு 12 ஆயிரத்து 400 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.
Dell 15 Laptop
இந்த லேப்டாப் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 120Hz ஸ்கிரீன் Refresh வருகிறது.இது 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD ஸ்டோரேஜ் உடன் இணைந்த 12th GEN இன்டெல் கோர் i3 பிராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 10 மணிநேரம் வரை தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அமேசான் தளத்தில் இந்த லேப்டாப் 34 ஆயிரத்து 490 ரூபாயில் விலையில் கிடைக்கிறது.எக்ஸ்சேஞ்ச் ஆப்பரில் வாங்குபவர்களுக்கு 14 ஆயிரத்து 400 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ