ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகிவிட்டீர்களா? இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்!

ஆன்லைனில் புதிதாக ஒரு பொருள் விற்பனைக்கு வந்தால் அதனை எப்படியாவது வாங்கிவிட என்று என்ற உங்களுக்கு வருகிறதா? இதன் மூலம் அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா? இப்படிப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிட சில வழிகள் உள்ளன.   

Written by - RK Spark | Last Updated : May 23, 2024, 07:42 AM IST
  • ஆன்லைன் ஷாப்பிங் நம்மை அடிமையாக்கலாம்.
  • தேவையின்றி பணத்தை செலவு செய்ய தூண்டலாம்.
  • துரிதமாக செயல்படுவது பணத்தை மிச்சப்படுத்தும்.
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகிவிட்டீர்களா? இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்! title=

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை எதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் நேராக சம்பத்தப்பட்ட கடைகளுக்கு சென்று வாங்குவோம். அதுவும் அதற்கான தேவை இருந்தால் மட்டுமே வாங்கும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது வேகமாக ஓடும் இந்த உலகில் அமேசான், பிளிப்கார்ட், Blinkit மூலம் இருக்கின்ற இடத்தில் இருந்தே எதையும் வாங்க முடியும். இந்த நடைமுறை நம்மை மறைமுகமாக ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமை ஆக்குகிறது. நமக்கே தெரியாமல் நாம் இதில் சிக்கி கொண்டு உள்ளோம். அடிக்கடி ஆன்லைன் தளங்களுக்கு சென்று பார்ப்பதும் கூட ஒரு விதத்தில் இதற்கு அடிமை ஆகி இருக்கிறோம் என்பதற்கு அர்த்தம் ஆகும்.

மேலும் படிக்க | உங்கள் குழந்தையுடன் நெருக்கத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!!

நிபுணர்களின் கருத்து

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையானால் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். இந்த தேவையில்லாத பழக்கத்தால் நிதிச் சிக்கல்கள், உறவில் விரிசல், வாழ்க்கைத் தரம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த ஒரு பொருளை ஆன்லைனில் பார்த்தாலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற உணர்வு நமக்கு வரலாம். ஆன்லைன் ஷாப்பிங் செய்வது ஒருவித மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் மனதில் தருகிறது என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர். "ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது மிகவும் வசதியான ஒன்று மற்றும் பல்வேறு ஆபர்கள் மூலம் நம்மை ஒரு பொருளை வாங்க வைக்கின்றனர். இது மேலும் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு தருகிறது" என்று குறிப்பிடுகின்றனர். 

ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கான உளவியல் காரணங்கள்

மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு அல்லது தனிமை உணர்வு போன்றவற்றை சமாளிக்க மக்கள் ஷாப்பிங் செய்வதாக கூறப்படுகிறது. இது தனிமையில் இருந்து தற்காலிக நிவாரணம் மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. ஷாப்பிங் செய்யும் போது நமது உடல் டோபமைனை வெளியிடுகிறது. இது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை எளிதாக அணுக முடியும் என்பதும் அதிக ஷாப்பிங்கிற்கு வழிவகுக்கும். தள்ளுபடிகள், எண்ட் சேல் போன்றவற்றின் மூலம் நம்மை அடிக்கடி ஷாப்பிங் செய்ய தூண்டலாம். அதே போல குறைந்த சுயமரியாதை கொண்ட நபர்கள் இந்த ஷாப்பிங்க்கு அடிமையாக வாய்ப்புள்ளது. 

மன ஆரோக்கியம்

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாவது மன ஆரோக்கியத்தையும் நடத்தையையும் பாதிக்கும். இது நிதி நெருக்கடியை ஏற்படுத்தி குற்ற உணர்வு, அவமானம், பதட்டம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். மேலும் இந்த பழக்கம் உறவுகளின் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிகப்படியான செலவு கடனுக்கு வழிவகுக்கும், இது முதலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிடுவது எப்படி?

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு கை போனால் உடனே வேறு சிலவற்றில் கவனத்தை செலுத்துங்கள். உடற்பயிற்சி செய்தல், ஜாக்கிங் அல்லது நண்பருடன் பேசுதல் போன்ற மாற்று வழிகளை பின்பற்றுங்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை ஷாப்பிங் செய்ய எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதற்குள் மட்டும் செய்து பழகுங்கள். உங்கள் போனில் இருந்து ஷாப்பிங் ஆப்ஸை நீக்குவது இந்த பழக்கத்தில் இருந்து வெளியேற சிறந்த வழி ஆகும். ஆன்லைன் ஷாப்பிங்கிலிருந்து உங்கள் மனதைத் திசைதிருப்ப படங்கள் பார்ப்பது அல்லது வெளியில் செல்வது போன்ற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | விதிகளை மாற்றிய RBI, வங்கிகளுக்கு செக்: இனி இதற்கு அபராதம் கிடையாது.. கஸ்டமர்ஸ் ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News