Paytm-ல் இருப்பது போன்று AmazonPay-லும் இனி வாடிக்கையாளர்கள் தனது நண்பர்களுக்கு உடனடி பண பரிமாற்றம் செய்யலாம் என Amazon தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Amazon தற்போது தனது person-to-person (P2P) சேவையினை Android வாடிக்கையாளர்களுக்கு துவங்கியுள்ளது. இந்த வசதியின் மூலம் Amazon Pay வாடிக்கையாளர்கள் உடனடி பேங்கிங் சேவைகளை செயல்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களது தொடர்பு பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி வைக்க இயலும். அதேப்போல் தனது நண்பர்களிடம் இருந்து பணத்தினையும் பெற இயலும். பிரபல ஆன்லை வணிக செயலியான Paytm-ல் ஏற்கனவே இந்த வசதி செயல்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது Amazon Pay இந்த வசதியை தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.


இதுகுறித்து Amazon Pay இயக்குநர் விகாஸ் பன்சால் தெரிவிக்கையில்., தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் மிக பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை Amazon Pay பெரும். தற்போது செயல்பாட்டில் உள்ள Amazon வாலட் வசதியுடன் இனி வரும் நாட்களில் வாடிக்கையாளர்கள் Amazon Pay பணபறிமாற்றத்தையும் பயன்படுத்தலாம். இது வாடிக்கையாளர்களுக்கான புதியதொரு மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்துள்ளார்.


Amazon Pay-விற்கு வாடிக்கையாளர் யாரேனும் பதிவு செய்திருந்தால், அவரது தொடர்பில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளரின் Amazon Pay பயன்பாட்டு குறித்து தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Amazon Pay பயன்பாட்டினை மேலும் எளிமையாக பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.