இந்தியாவில் அமேசான் பிரைம் டே 2024 விற்பனையை ஜூலை 20 முதல் ஜூலை 21 வரை நடத்தும். விற்பனையின் போது மடிக்கணினிகளில் ரூ.45,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத விலையில் அதாவது ரூ.30,000க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த மடிக்கணினிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் பிரைம் டே 2024: அமேசான் இந்தியா ஜூலை 20 முதல் ஜூலை 21 வரை இந்தியாவில் பிரைம் டே 2024 விற்பனையை நடத்தும். வருடாந்திர நிகழ்வுக்கு முன்னதாக, வாங்குபவர்களுக்கு வழங்கும் சில சலுகைகளை நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக, அமேசான் மடிக்கணினிகள் வாங்குவதற்கு ரூ.45,000 வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. கூடுதலாக, எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கும் போது 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.


லேப்டாப் வாங்க திட்டமிடுபவர்களுக்கு சரியான நேரம் இது. ரூ. 30,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த மடிக்கணினிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.  


டெல் 15 மடிக்கணினி


பிரபலமான டெல் நிறுவனத்தின் லேப்டாப் ரூ.34,490க்கு அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது. முப்பாதாயிரத்திற்கு குறைவு எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதா? லேப்டாப் விலை 34,490 ரூபாயாக இருந்தலும், இந்த விற்பனைத் திருவிழாவில் ரூ.28,990 விலையில் கிடைக்கும். டெல் லேப்டாப்பை வாங்கும் போது ரூ.14,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும் என்று அமேசான் கூறுகிறது.


15.6-இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 120Hz ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட், 250 nits உச்ச பிரகாசத்துடன் கிடைக்கும் இந்த லேப்டாப், 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி SSD சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட 12வது ஜெனரல் இன்டெல் கோர் i3 செயலி மூலம் இயங்குகிறது. விண்டோஸ் 11 இல் இயங்கும் டெல் நிறுவனத்தின் லேப்டாப் இது.


மேலும் படிக்க | மழைக்காலத்தில் ஸ்மார்ட்போனை பாதுகாக்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்...


ஏசர் ஆஸ்பியர் லைட்
லேப்டாப்களில் மிகவும் பிரபலமான ஏசர் ஆஸ்பியர் லைட் அமேசானில் ரூ.29,990க்கு கிடைக்கிறது. இது அசல் விலை, இந்த விலையில் இருந்து தள்ளுபடி கொடுக்கப்பட்டப் பிறகு 25,990 ரூபாய் விலையில் ஏசர் ஆஸ்பியர் மடிக்கணினி கிடைக்கும். இந்த லேப்டாப்பை வாங்கும் போது அமேசான் ரூ.14,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது.


15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளேவுடன் வரும் ஏசர் ஆஸ்பியர் லைட் மடிக்கணினியில் 8ஜிபி ரேம் இருக்கிறது. 512ஜிபி SSD சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட 12வது ஜெனரல் இன்டெல் கோர் i3 செயலி மூலம் இயங்கும் இது, விண்டோஸ் 11இல் இயங்குகிறது. HD வெப்கேம் உண்டு.  


லெனோவா ஐடியா பேட் ஸ்லிம் 1


இந்த லேப்டாப் ரூ.37,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் விற்பனையில் ரூ.35,240 விலையில் கிடைக்கும். அமேசான் இந்த லேப்டாப்பை வாங்கும் போது ரூ.27,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. இந்த தள்ளுபடி மடிக்கணினியின் விலையை கணிசமாகக் குறைக்கிறது.


15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளேவுடன் 250 nits உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இது AMD Ryzen 5 5500U செயலியில் இயங்கும் லெனோவா ஐடியா பேட் ஸ்லிம் 1, 16GB ரேம் மற்றும் 512GB SSD சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் 11 இல் இயங்குகிறது.


மேலும் படிக்க | வந்தாச்சு வாட்ஸ்அப்பின் லேட்டஸ் அப்டேட்! இனிமேல் இன்னும் ஸ்மார்ட்டாய் புகைப்படத்தை பார்க்கலாமே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ