OnePlus 6 மொபைலின் விலை மற்றும் புகைப்படத்தினை Amazon வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வரும் மே 16-ஆம் நாள் இந்தியாவிலும், அதற்கு அடுத்த நாளான மே 17 அன்று சீனாவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


OnePlus நிறுவனத்தின் முந்தைய OnePlus 5T -வை காட்டிலும் இந்த OnePlus 6 ஆனது சற்று கூடுதல் விலையுடன் இருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


OnePlus 6 ஆனது மூன்று வகைகளாக வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி


  • 64 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 40,700  எனவும்,

  • 128 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 45,700 எனவும்,

  • 256 GB  நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 Premium ஆனது ரூ.44,999 - ரூ.48,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விலை மதிப்பானது UK-ல் விற்கப்படும் OnePlus 6 மொபைலின் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னதாக OnePlus 5T வெளியாகும் போது UK விலையுடன் ஒப்பிட்டு கணக்கிடப்பட்ட இந்திய விலையானது சுமார் 10% வேறுபாட்டுன் காணப்பட்டது.


மேலும், இந்த மொபைலின் சந்தைக்கு முந்தைய விற்பனையானது நியார்க், லண்டன், பேரிஸ், மில்லன் மற்றும் பெல்ஜியங்கில் நடைப்பெற்றது. இதனையடுத்து இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


OnePlus 6 சிறப்பம்சங்கள்...


  • Dual Sim, VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC

  • Octa Core, 2.45 GHz Processor

  • 6 GB RAM, 64 GB inbuilt

  • 3300 mAh Battery

  • 6.01 inches, 1080 x 2160 px display

  • 16 MP Dual Rear + 16 MP Front Camera

  • Android, v7.1.1