சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு மத்தியில், சீன தயாரிப்பான OnePlus 8 Pro இந்தியாவில் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களில் விற்று முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு லடாக்கின் கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வியாழன் அன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த சீன பிரீமியம் ஸ்மார்ட்போன் OnePlus 8 Pro, அதன் ஆன்லைன் விற்பனை தொடங்கிய சில நிமடங்களில் அனைத்து சாதனங்களையும் விற்று தீர்த்தது.


‘மக்களிடம் உண்மையை கூறுங்கள்’; பிரதமரிடம் சோனியா காந்தி வலியுறுத்தல்!...


OnePlus தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் விற்கப்படுவது இது முதல் முறை அல்ல. என்றபோதிலும், கால்வான் சம்பவம் பிராண்டின் சமீபத்திய சலுகையை பாதிக்கும் என ஊகங்கள் பரவி வந்த நிலையில் OnePlus தனது அனைத்து சாதனத்தையும் இந்தியாவில் விற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


OnePlus மட்டுமல்ல, மற்றொரு சீன பிராண்டான சியோமி(Xiaomi) தனது இரண்டு மடிக்கணினி (laptop) மாடல்களை புதன்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, வெறும் இரண்டு நாட்களுக்குள் அனைத்து சாதனங்களையும் விற்று தீர்த்துள்ளது.


சாத்தியமான மாற்றீடு இல்லாமல், சீன ஸ்மார்ட்போன்களுக்கான தேவை ஒரு வெற்றியைப் பெற வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்திய ஆய்வாளர்களின் கூற்றை பொய்பித்துள்ளது. 


இதனிடையே Realme இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் இந்த வாரம், “ரியல்மே(Realme) ஒரு இந்திய நிறுவனம் என்று பெருமையுடன் சொல்ல முடியும்” என குறிப்பிட்டார். நிறுவனம் இந்தியாவில் அதன் வெற்றியை ஸ்கிரிப்ட் செய்திருந்தாலும், இது சீனாவை தளமாகக் கொண்ட BBK எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.


மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என ராகுல் காந்திக்கு அமித் ஷா அட்வைஸ்..!


இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ்(Micromax) போன்ற இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மீண்டும் வருவதற்கு தயாராகி வருகின்றனர் என செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன.