உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறதா? அப்படியானால் இது உங்களுக்கான செய்திதான்!! உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் பதிவிறக்கம் செய்திருக்கும் சில செயலிகளைப் பற்றி இந்த பதிவில் சில முக்கிய விவரங்களைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த செயலிகள் உங்கள் தொலைபேசிக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பது பற்றிய எச்சரிக்கையையும் நீங்கள் பெறுவீர்கள். சைபர் செக்யூரிட்டி மென்பொருள் வழங்கும் நிறுவனம் ஒன்று இது குறித்து தகவல் அளித்துள்ளது. அந்த தகவலைப் பற்றி இந்த பதிவில் மேலும் தெரிந்து கொள்வோம்.


உங்கள் மொபைலுக்கு ஆபத்தான Android செயலிகள்


சைபர் பாதுகாப்பு வழங்குநரான அவாஸ்ட் (Avast) சமீபத்தில் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய 151 செயலிகளைப் பற்றி கண்டுபிடித்தது. இந்த செயலிகள் ஒரு பெரிய எஸ்எம்எஸ் மோசடியின் ஒரு பகுதியாக உள்ளன. எனவே ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலிகளைப் பதிவிறக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவாஸ்ட் கூறுகிறது. இதன் மூலம் பயனர்கள் மால்வேர் மற்றும் மோசடிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும்.


ALSO READ:WhatsApp செயலியின் 51 ரூபாய் கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி? 


இந்த ஆண்ட்ராய்டு செயலிகளிடம் ஜாக்கிரதை


Avast-ன் படி, சுமார் 80.5 மில்லியன் மக்கள் இந்த 151 மோசடி செயலிகளை (Apps) 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவிறக்கம் செய்துள்ளனர். கஸ்டம் கீபோர்ட், QR குறியீடு ஸ்கேனர்கள், வீடியோ மற்றும் புகைப்பட எடிட்டிங் கருவிகள், கால் பிளாக்குகள் ஆகியவற்றுக்காக பதிவிறக்கம் செய்யப்படும் இந்த செயலிகள் உண்மையில் மால்வேர் ஆகும். இவை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மிகவும் ஆபத்தானவை.


இந்தப் செயலிகள் அனைத்தும் ஒரே மாதிரியைப் பின்பற்றுகின்றன. நிறுவிய பின் அவை ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தைக் (Location) கேட்கும். பின்னர் IMEI எண்ணைக் கேட்கும். இவற்றின் மூலம் உங்கள் பகுதி குறியீடு மற்றும் மொழி அடையாளம் காணப்படும்.


இந்த செயலிகள் பயனர்களை எப்படி ஏமாற்றுகின்றன?


இந்தப் செயலிகள் முதலில் பயனரின் ஃபோன் (Mobile Phone) எண்ணையும் சில சமயங்களில் மின்னஞ்சல் முகவரியையும் எடுத்து, பயனருக்குத் தெரிவிக்காமலேயே பிரீமியம் எஸ்எம்எஸ் சேவைக்கு பதிவு செய்ய இந்தத் தகவலைப் பயன்படுத்துகின்றன. இதில், மாதந்தோறும் சுமார் மூவாயிரம் ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கின்றனர். பயனர்களை ஏமாற்றிய பிறகு, இந்த செயலிகள் வேலை செய்வதை நிறுத்திவிடுகின்றன. சில சமயங்களில் இவை புதிய சந்தா விருப்பங்களை வழங்குகின்றன.


ALSO READ:ரூ. 15000-ல் OPPO வின் புதிய ஸ்மார்ட் போன்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR