பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், கடந்த மாதம் தனது UPI அடிப்படையிலான கட்டணச் சேவைக்கான கேஷ்பேக் செயல்முறையை பரிசோதிக்கத் தொடங்கியது. ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்காக வாட்ஸ்அப் இப்போது இந்த அம்சத்தை அமல்படுத்துகிறது.
இந்த சலுகையின் மூலம், PhonePe மற்றும் Google Pay போன்ற ஜாம்பவான்களுடன் வாட்ஸ்அப் போட்டி போடுகிறது. கேஷ்பேக்கை எவ்வாறு பெறுவது மற்றும் எத்தனை முறை ரிவார்டைப் பெறலாம் என்ற தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.
ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப் பீட்டா செயலி, அரட்டைப் பட்டியலில் மேலே "பணத்தைக் கொடுங்கள், ரூ. 51 திரும்பப் பெறுங்கள்" என்ற செய்தியுடன் கூடிய பேனரைக் காட்டத் தொடங்கியுள்ளது. வெவ்வேறு தொடர்புகளுக்கு பணம் அனுப்புவதன் மூலம், ஐந்து மடங்கு உத்தரவாதமான கேஷ்பேக் பெறலாம். அதிகபட்சம் 51 ரூபாய் வரை கிடைக்கும். பெறலாம். இந்த கேஷ்பேக் ஆஃபருக்கான உச்சத்தொகை வரம்பை வாட்ஸ்அப் நிர்ணயிக்கவில்லை. ஒரு கணக்கிற்கு பணம் செலுத்திய உடனேயே ரூ.51 கேஷ்பேக் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | PM Kisan: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் இரட்டை நன்மை பெற இதை செய்யுங்கள்!
பணத்தை திரும்பப் பெறுவதற்கான முழு உத்தரவாதம் உள்ளது, ஆனால் நீங்கள் அதை ஐந்து முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டின் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் பயனர்களை கவரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் Google Pay முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஸ்க்ராட்ச் கார்டு மூலம் 1,000 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை கொடுக்கப்பட்டது. பிற சேவைகளுக்கான கூப்பன்களுடன் இந்தத் திட்டம் இன்னும் இருக்கிறது.
வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் என்பது ஒரு தனியான வாட்ஸ்அப் இந்தியா பேமெண்ட்ஸ் பிரைவசி பாலிசிக்கு உட்பட்ட யுபிஐ அடிப்படையிலான சேவையாகும். UPI மூலம் செய்யும் பணம் செலுத்தல்கள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், இந்திய அரசின் சட்டங்களைப் பின்பற்றி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த பேமெண்ட் சிஸ்டம் செயல்படுவதாக நிறுவனம் உறுதியளிக்கிறது.
பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை வாட்ஸ்அப்பில் சேர்த்தவுடன் பணத்தை அனுப்பலாம் அல்லது பெறலாம். கட்டண விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை பயனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். SMS மூலம் சரிபார்ப்பதற்கான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும். WhatsApp UPI பணம் செலுத்தும் முறையை ஆதரிக்கும் வங்கிகள் மட்டுமே பட்டியலிடப்படும். கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் பட்டியலிலிருந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்து பணப் பரிமாற்றத்தை செய்யலாம்.
Also Read | தனித்து வசிக்கும் பெண்கள் ரேஷன் அட்டையை சுலபமாக பெறும் வழிமுறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR