ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வெறும் ரூ.3000 மட்டுமே சொன்னால் நம்ப முடியவில்லையா? இதோ விவரம்
ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் விலை சுமார் 90 ஆயிரம் ரூபாய். ஆனால் வெறும் 3 ஆயிரத்திற்கு விற்கப்படுவதால் வாடிக்கையாளர்களால் நம்பவே முடியவில்லை.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் உண்மையான விலையை கேள்விப்பட்ட உங்கள் அனைவருக்கும் ஒரு யோசனை இருக்கும். ஏனென்றால் அதன் விலை சுமார் ரூ.90,000 என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை வாடிக்கையாளர்கள் வெறும் 3,000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. விலையில் இவ்வளவு பெரிய வித்தியாசம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழாமல் இருந்தால் தான் வியப்பு. அதேநேரத்தில் எப்படி 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | iPhone 14 Pro Max: வெறும் ரூ.40,000-க்கு இதை வாங்குவது எப்படி?
ஆப்பிள் அல்ட்ரா வாட்ச் உண்மையா?
வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் உண்மையில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவின் நகலாகும். இது ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவைப் போலவே இருக்கிறது. அசல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற அம்சங்கள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரிஜினலாக இருக்கும் ஆப்பிள் அல்ட்ரா மாடலில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதில் வேலை செய்யாது. பெயருக்காக வேண்டும் என்றால் இந்த வாட்சை வாங்கி நீங்கள் ஆப்பிள் அல்ட்ரா கனவை தீர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள் அல்ட்ரா மிகவும் காஸ்டிலி
ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை வாங்குவது உங்களுக்கு பணத்தை வீணடிக்கும். பொருளாதார நெருக்கடியுடன் காலத்தை தள்ளிக் கொண்டிருப்பவர்களுக்கு 90 ஆயிரம் செலவழித்து ஆப்பிள் அல்ட்ரா வங்குவதெல்லாம் இயலாத காரியம். அவர்கள் இத்தகைய பிரதி மாடலை வாங்கி பயன்படுத்தலாம். அதேநேரத்தில் சிலர் இந்த வாட்சையே ஆப்பிள் அல்ட்ரா என விற்பனை செய்கின்றனர். இதில் நீங்கள் மாற்றிக் கொள்ளாமல் இருக்கவும் இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
மேலும் படிக்க | ஆப்பிள் 14 மொபைலை பின்னுக்குத் தள்ளும் சாம்சங்கின் புது மாடல்... என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ