ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் வெளியீடு! பெண்களுக்கென்று பிரத்யேகமான ஸ்மார்ட்வாட்ச்!
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உச்சத்தை எட்டியுள்ள ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் மற்றொரு தயாரிப்பான ஸ்மார்ட்வாட்ச்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தாலும் புது புது அம்சங்களை கொடுக்க ஆப்பிள் தவறவில்லை.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உச்சத்தை எட்டியுள்ள ஆப்பிள் நிறுவனம் தற்போது அதன் மற்றொரு தயாரிப்பான ஸ்மார்ட்வாட்ச்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருந்து வந்தாலும் புது புது அம்சங்களை கொடுக்க ஆப்பிள் தவறவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் 7-வது வர்ஷன் ஆப் ஸ்மார்ட் வாட்ச் வெளியாக இருக்கும் நிலையில், அதில் இருக்கும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் கண்டறியப்பட்டு வந்த ரத்த அழுத்தத்தை நொடி பொழுதில் கைமணிகட்டில் இருந்து கண்டறியும் புது அம்சத்தை ஸ்மார்ட் வாட்ச்-ல் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அதன்படி வாட்ச்சில் பொருத்தப்படும் சென்சார், இதயத்துடிப்பின் போது ரத்த அலையின் வேகத்தை துல்லியமாக கணக்கிட்டு ரத்த அழுத்தத்தை காட்டும். மற்ற ஸ்மார்ட் வாட்ச்களில் இந்த வசதி இருப்பினும் அவை துல்லியமா? என்பது கேள்விக்குறியே ஆகும்.ஏற்கனவே ஆப்பிள் வாட்ச்களில் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் உறக்கத்தை அளவிட முடியும். இதற்கு ஒருபடி மேலே சென்று உறக்கத்தில் மூச்சு இடையில் நிற்கும் நோயை கண்டறியும் வகையில் வாட்ச் மேம்படுத்தப்பட உள்ளது.அதன்மூலம் இந்த நோய் உள்ளவர்களுக்கு தூக்கத்தின் போது, மூச்சு இடையில் நின்றுவிட்டால் உடனடியாக வாட்ச் அலாரம் அடித்து அவர்களை எழுப்பும்.
மாதவிடாய் சுழற்சி முறையாக இல்லாத பெண்களுக்கு ஆப்பிளின் ஸ்மார்ட் வாட்ச், ஒரு உதவுகோளாக மாற உள்ளது.அதன் மூலமாக அண்டம் விடுதல் உட்பட மாதவிடாய் சுழற்சி காலத்தை சரியான நேரத்தில் பெண்களுக்கு notification ஆக காட்டும். இந்த தொழில்நுட்பத்தின் முதற்கட்ட ஆராய்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மணிக்கட்டில் ஸ்மார்ட் வாட்சை கட்டி இருப்பதன் மூலமாக முழு உடல் வெப்பநிலையை அளந்துகூறும் வகையில் புது அம்சத்தை ஆப்பிள் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி உடல் வெப்பநிலை குறிப்பிட்ட எல்லையை தாண்டியவுடன் காய்ச்சலுக்கு அறிகுறி என்றும் வாடிக்கையாளர்களை எச்சரித்துவிடும்.இது பெண்களுக்கு உதவும் அசத்தலான கண்டுபிடிப்பு தான்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR