Low Budget Smartphones In Amazon: இந்தியர்களாகிய நம்மில் பலருக்கும் ஒரு செயலை செய்யும் முன்னரோ அல்லது ஒரு பொருளை வாங்கும் முன்னரோ நல்ல நேரம் பார்த்து அதனை செய்வார்கள். அந்த நல்ல நேரத்தை எப்படி கணிப்பார்கள் என்பது மட்டும் அவரவர் நம்பிக்கை சார்ந்தது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், டெக் உலகில் மிகவும் நல்லது என்றால், அது நீங்கள் வாங்க ஆசைப்படும் சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கும் சீசன்தான் எனலாம். அந்த வகையில், மிகவும் குறைந்த பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் எடுத்தே ஆக வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால், இதுதான் உங்களின் நல்ல நேரம்.


ஒவ்வொருவருக்கும் ஸ்மார்ட்போனை வைத்து ஒவ்வொரு தேவை இருக்கும். குறிப்பாக, ஒருவர் இரண்டு மொபைல்களை வைத்திருப்பார்கள். ஒன்று குடும்பம் சார்ந்த தனிப்பட்டவையாகவும், மற்றொன்று வேலை சார்ந்த பயன்பாடுகளுக்கும் வைத்திருப்பார்கள். அப்படியானவர்கள் மட்டுமின்றி, பல்வேறு பயன்பாடுகளுக்காவும் பட்ஜெட் விலையில் மொபைல் எடுக்க விரும்புவார்கள். 


இந்நிலையில், அமேசானில் தற்போது சுமார் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ. 10 ஆயிரம் வரையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அந்த விலையில் நீங்கள் பட்ஜெட் தேடினால் இதனை தொடர்ந்து படிக்கலாம். 


மேலும் படிக்க | 2ஜி நெட்வொர்க்கை ஒழிக்க ஜியோ போட்ட மாஸ் பிளான்..! 4ஜி நெட்வொர்க்கில் புதுபோன் - விலை?


Redmi 13C


Redmi 13C மொபைல் 8GB ரேம் மற்றும் 256GB சேமிப்பு இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Redmi 13C மாடலின் பின்புறத்தில் 50MP AI மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதிலும் 5,000mAh பேட்டரி உள்ளது. கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் இது கிடைக்கிறது. 


கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.74-இன்ச் HD+ 90Hz (Refesh Rate) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது MediaTek Helio P85 பிராஸஸர் மூலம் இயங்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை 11 ஆயிரத்து 999 ரூபாயாகும். ஆனால் 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது.


Redmi A2


Redmi A2 மாடல் 4GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 5,000mAh பேட்டரி கிடைக்கிறது. 16.5CM HD+ டிஸ்ப்ளேவுடன் 400 nits உச்ச பிரகாசத்துடன் கிடைக்கிறது. இது MediaTek Helio G36 பிராஸஸர் மூலம் இயங்குகிறது.


மேலும், இதன் பின்புறம் 8MP கேமராவும், முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளது. கருப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த போன் விலை 9 ஆயிரத்து 999 ரூபாயாகும். ஆனால் 5 ஆயித்து 499 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது. 


Realme Narzo 50i Prime


Realme Narzo 50i Prime மொபைல் Unisoc T612 பிராஸஸர் மூலம் இயங்கும். இது 400 nits உடன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 4GB RAM மற்றும் 64GB இன்டர்நெல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் பின்புறம் 8MP கேமராவும், முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளது. இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி உள்ளது. குறிப்பாக இந்த மொபைல் 6 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 


Samsung Galaxy M04


சாம்சங்கின் இந்த கேலக்ஸி M04 மாடல் மொபைலானது, 720 x 1600 பிக்சல்கள் ரெசோல்யூஷன் கொண்ட 16.5CM HD+ LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது MediaTek Helio P35 பிராஸஸர் மூலம் இயங்குகிறது. இதன் பின்புறத்தில் 13MP + 2MP கேமரா இரட்டை கேமரா அமைப்பு உள்ளது முன்பக்கத்தில் 5MP கேமரா உள்ளது. 


இதில் 5,000mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் விலை 11 ஆயிரத்து 999 ரூபாய். ஆனால் 7 ஆயிரத்து 999 ரூபாய்க்கு தற்போது அமேசானில் கிடைக்கிறது.  


மேலும் படிக்க | Infinix Note 50: 8000mAh பேட்டரி, 200MP கேமரா என அமர்களப்படுத்தும் இன்பினிக்ஸ்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ