புதுடெல்லி: தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் தனது கட்டண செயலியான Google Pay-ஐ ஊக்குவிக்க, தனது மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (CCI) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகிள், பிளே ஸ்டோர் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS) மீதான அதன் கட்டுப்பாட்டின் மூலம், பயனர்களுக்கு மற்ற போட்டி கட்டண செயலிகளை விட Google Pay மிக ஏதுவாகவும் வசதியாகவும் இருக்கும்படி செய்து Google Pay –வை அதிகம் ஆதரிக்கும் படி செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. இது UPI மூலமாக இந்த துறையில் இருக்கும் மற்ற கட்டண செயலிகள், பயனர்கள் என இருவருக்குமே நஷ்டத்தையும் தீமையையும் விளைவிக்கும். தகவலறிந்தவரின் கூற்றுப்படி, இது சட்டத்தின் பிரிவு 4 இன் பல்வேறு விதிகளை மீறி கூகிள் தனது மேலாதிக்க நிலையை துஷ்பிரயோகம் செய்வதைக் காட்டுகிறது.


ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு (Android) கட்டமைப்பில் பிளே ஸ்டோரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்ற ஸ்மார்ட் மொபைல் சாதனங்கள் தொடர்பாக தகவலறிந்தவர் ஆண்ட்ராய்டு அமைப்பின் விரிவான பின்னணியை அளித்துள்ளார் என்று சிசிஐ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


கூகிள், ஆல்பாபெட் இன்க் - இந்தச் சட்டத்தின் 4 வது பிரிவின் பல்வேறு விதிகளை மீறியுள்ளன என்றும் இதற்கு விரிவான விசாரணை தேவை என்றும் சி.சி.ஐ கூறியது.


"மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சட்டத்தின் பிரிவு 26 (1) இன் விதிகளின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு இயக்குநர் ஜெனரலை ஆணையம் அறிவுறுத்துகிறது. டி.ஜி. இந்த உத்தரவைப் பெற்ற நாளிலிருந்து 60 நாட்களுக்குள் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணையம் உத்தரவிடுகிறது"என்று அது கூறியுள்ளது.


ALSO READ: ரீசார்ஜ் செய்யும் விலையில் phone வாங்கலாம் தெரியுமா? Rs.699 only!!


குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கூகிள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க், கூகிள் பிளேவின் தேடல் தரவரிசையில் GPay app (Tez) –ஐ கூகிள் ஆதரிக்கவில்லை என்றும் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறான கருத்துகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளன" என்றும் கூறியது.


"பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு கூகிள் தேடல் முடிவுகளை பிளேவில் வழங்குகிறது. இது GPay app (Tez)-வுக்கு சாதகமாக செயல்படவில்லை. மேலும், பிளேவில் அதன் தேடல் தரவரிசை பயனரின் வினவலுக்கு ஏற்ப அவர்களுக்கு உயர் தரமான, பொருத்தமான செயலிகளை வழங்குவதை உறுதிசெய்ய கூகிள் ஒவ்வொரு வணிக ஊக்கத்தையும் கொண்டுள்ளது" என்றும் கூகிள் நிறுவனம் தனது பதிலில் கூறியுள்ளது.


CCI உத்தரவு, இந்த உத்தரவில் கூறப்பட்ட எதுவும் வழக்கின் தகுதி குறித்த இறுதி கருத்தை வெளிப்படுத்தாது என்றும், டி.ஜி "இங்கு மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளால் எந்த வகையிலும் திசைதிருப்பப்படாமல்" விசாரணையை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


ALSO READ: Tech Guide: உங்கள் computer, laptop வேகத்தை அதிகரிக்க 5 எளிய வழிகள்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR