பிஎஸ்என்எல் அறிவிப்பால் ஜியோ - ஏர்டெல் கலக்கம்! வந்தாச்சு 5G
நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சேவையில் இறங்கப்போவதை அறிவித்துள்ளது. இது தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
BSNL 5G; நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL), 2024 ஆம் ஆண்டில் 5G சேவையைத் தொடங்குகிறது. BSNL எப்போது 5G சேவை தொடங்கும் என நீண்ட நாட்களாக காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இப்போது மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை பேசும்போது, BSNL அடுத்த ஆண்டு 5G சேவை தொடங்கும் என்றும், இதற்கு TCS மற்றும் C-DOT ஆகியவற்றுடன் கூட்டமைப்பு மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Xiaomi இணையதளத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் SuperNote!
ஒடிசாவில் 5ஜி சேவை
2024ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை தொடங்கும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை ஒடிசாவில் தொடங்க இருப்பதை தெரிவித்த அவர், பிஎஸ்என்எல் 5ஜி அறிவிப்பு குறித்தும் பேசினார். இன்னும் 2 ஆண்டுகளில் ஒடிசா முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்றும், புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் 5ஜி சேவை தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.
5000 மொபைல் டவர்கள் நிறுவப்படும்
ஒடிசா மாநிலத்தில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி அரசு ரூ.5,600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒடிசாவின் 100 கிராமங்களில் 4ஜி சேவைக்காக 100 டவர்கள் நிறுவப்படும். தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த மாநிலம் முழுவதும் 5,000 டவர்கள் நிறுவப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் படிக்க | ரூ 139 ரீசார்ஜ் பிளான்..டெய்லி 2ஜிபி டேட்டா..அசரவைக்கும் பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ